"ஸ்டாலின் பிராட் காஸ்ட்"'Speaking for india' ஜி.எஸ்.டி.யால் ரூ.85 ஆயிரம் கோடி இழப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

"ஸ்டாலின் பிராட் காஸ்ட்"'Speaking for india' ஜி.எஸ்.டி.யால் ரூ.85 ஆயிரம் கோடி இழப்பு!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

 தி.மு.க.வின் மிகப் பெரிய பலம், அது காலத்திற்கு ஏற்ற மாதிரி புதிது புதிதாக வரும் தொழில்நுட்பங்களில் எல்லாம் தன்னை இணைத்துக்கொள்வது.

ஒரு காலத்தில் திமுகவின் கொள்கைகளைப் பேச 80 பத்திரிகைகள் இருந்தன. அச்சில் வந்த  பத்திரிகைகளின் எண்ணிக்கை இது. அச்சில் வராத கையெழுத்து பத்திரிகைகள் பல. ஏன்? மேனாள் தி.மு.க. தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்  அவரது 'முரசொலி'யை முதலில் கையெழுத்து பத்திரிகையாகவே தொடங்கினார்.

அதன் இன்னொரு வடிவமான 'டிஜிட்டல்' யுகத்தில், திமுக 75 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடைபோடுகிறது. 'ட்விட்டர்', 'ஃபேஸ்புக்' என களத்தில் இறங்கிய தி.மு.க., பின்னர் தனது பொதுக்கூட்டங்களைத் தொலைக்காட்சி களத்தைத் தாண்டி, 'யூடியூப்பில் லைவ்' செய்து வருகிறது.

அதற்கும் அடுத்தகட்டத்திற்கு இக்கட்சி தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது. 'ட்விட்டர் ஸ்பேசில்' கட்சித் தலைவர்களை வைத்துச் சொற்பொழிவுகள் நடத்தி வருகின்றது. இப்போது தமிழ்நாட்டைக் கடந்து இந்தியா முழுமைக்கும் "ஸ்டாலின் பிராட் காஸ்ட்" தொடங்கி, 'ஷிஜீமீணீளீவீஸீரீ யீஷீக்ஷீ வீஸீபீவீணீ' என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதுவரை 3 'எபிசோட்ஸ்' வெளிவந்துவிட்டன. 2ஆவது எபிசோட்டில் பாஜகவின் ஊழல் முகத்தை முன்வைத்துப் பேசினார். அது இந்தியா முழுவதும் பேசு பொருளானது.

இதில் 'ஹைலைட்ஸ்' என்னவென்றால், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளிலும் பேச்சு 'சப் டைட்டிலுடன்' வெளியிடப்படுகிறது. ஆக, 'டெக்னாலஜி'தான் இன்றைய இளைஞர்களின் 'சைக் காலஜி'. அந்தத் துடிப்பான நாடியை இந்திய அளவில் முதலில் பிடித்துப் பார்த்துள்ள கட்சி திமுக. இப்போது 3ஆவது எபிசோட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சியை பா.ஜ.க. எப்படி எல்லாம் பறிக்கிறது என்பதைப் பட்டியல் போட்டு அம்பலப்படுத்தி இருக் கிறார். தி.மு.க.வின் 5 முக்கியமான கொள்கைகளை விளக்கிவிட்டு, அதில் 5ஆவது கொள்கை பற்றி பெரிய பாடமே நடத்தி இருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

3ஆவது எபிசோட் 'Speaking for india'  வில் மு.க.ஸ்டாலின், "செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியான 2ஆவது எபிசோட்டில் சி.ஏ.ஜி. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த 7 மெகா ஊழல்கள் பற்றிப் பேசியிருந்தார்.

அக்டோபர் 2ஆவது வாரத்தில் ஒரு செய்தி வந்தது. பா.ஜ.க. அரசின் ஊழல்களை வெளி கொண்டு வந்த சி.ஏ.ஜி. அதிகாரிகள் செப்டம்பர் 12 ஆம் தேதியே கூண்டோடு மாற்றப்பட்டதாக அச்செய்தியில் குறிப் பிடப்பட்டிருந்தது. எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? இந்த 3ஆவது எபிசோட்டில் நான் பேசப் போவது மாநில உரிமைகள்! திமுக தனக்கென்று தனித்துவமான கொள்கைகளைக் கொண்ட கட்சி மட்டுமல்ல; அது 75ஆவது ஆண்டுவிழாவையும் கொண்டாடிவரும் கட்சி மட்டுமல்ல; நாடாளுமன்றத்தில் இன்று 3ஆவது பெரிய கட்சியாக இருந்து, இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போராடுகின்ற கட்சி யாகவும் அது இருந்து வருகிறது. தி.மு.க.வின் கொள்கைகளில் மிக முக்கியமானது மாநில சுயாட்சி. இந்தியா என்பதே கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. இங்கே பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள்.

நம் மக்களிடம் ஏராளமான சமய நம்பிக்கைகள் இருக்கின்றன. பல்வேறு வழிபாட்டு முறைகள் இருக் கின்றன. அவர்களுக்கான உரிமைகளை அரசியல் சட்டம் தந்துள்ளது. இத்தனை வேறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

சுருக்கமாகச்சொல்ல வேண்டுமென்றால், இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான ஒரு பூந்தோட்டம். அதனால்தான், நம் நாட்டின் நிர்வாக அமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சி கொண்ட, பல நெறிமுறைகள் கொண்ட பல்வேறு மாநிலங்கள் கூடிய ஒன்றியமாக நம் நாட்டை உருவாக்கினார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முன்பாக குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார். அப்போது எல்லாம் மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நிறைய பேசினார்.

ஆனால், அவர் பிரதமராகி டில்லிக்கு வந்ததற்குப் பிறகு, அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியே அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அந்த முதல் வரி என்னவென்றால், india that is bharat, shall be a union of states.

ஒரு முதலமைச்சராக அன்று மாநில உரிமைகளைப் பேசிய அவர், இப்போது பிரதமராகி மாநில உரிமை களைப் பறிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி, மாநிலங்களை ஒழிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அதை முனிசிபா லிடிகளாக மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கின்றது.

மோடி முதலமைச்சராக இருந்து பேசியதற்கும், பிரதமரானதும் செய்கின்ற செயல்களுக்கும் வேறு பாடுகள் உள்ளன. அதற்குச் சில எடுத்துக்காட்டுகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

டில்லியை மய்யப்படுத்தாமல், மாநிலங்களுக்கு ஏற்ற அணுகுமுறையோடு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால், மாநில அமைச்சர்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கக் கூடிய 'திட்டக்குழு'வைக் கலைத்துவிட்டு, சத்தே இல்லாத "நிட்டி ஆயோக்" அமைப்பை உருவாக்கினார். மாற்றுக் கட்சிகளைப் பழிவாங்க மாட்டேன் என்றார்.

ஆனால் பா.ஜ.க. என்ன செய்கிறது? எந்த மாநிலங் களில் எல்லாம் பா.ஜ.க. ஆட்சிக்கு வரமுடியவில்லையோ, அங்குள்ள மாநிலக் கட்சிகளை 2 ஆக அல்லது 3 ஆக உடைத்து, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சி நடத்துகிறார்கள்.

இதில் முக்கியமாக இன்னொன்றையும் பிரதமர் சொன்னார். கூட்டாட்சி கருத்தியலை ஆதரிக்கின்றவன் நான். டில்லிக்குக் காவடி தூக்குகின்ற நிலைமையை மாற்றுவேன் என்றும் சொன்னார்.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது? மாநில அரசுகள் கொண்டுவரும் திட்டங்களை நிறைவேற்றக் கூட, ஒன்றிய அரசின் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கி உள்ளார்கள்.

மறைமுக வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்ய, எல்லா மாநில அரசுகளுடனும் ஆலோசனை செய்வோம் பாஜக தன் தேர்தல் அறிக்கையில் சொன்னது. கூடுத லாகப் பிரதமர் மோடி, மாநில அரசுகளுக்கு அதிக நிதியாதாரங்களை வழங்குவோம் என்று சொன்னார்.

ஆனால், ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குகின்ற காலத்தைக் கூட நீட்டிக்க முடியாது என்று சொல்லி விட்டார். மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய பங்கையும் ஒழுக்காகப் பிரித்து அளிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால், மாநிலங்களின் நிதி நிலைமை ஜிஎஸ்டி முறையால் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது.

12ஆவது நிதி ஆணையத்திலிருந்து நிதி ஒதுக்கீடு மிகக் குறைந்துவிட்டதால், கடந்த 19 ஆண்டுகளில் நம் தமிழ்நாட்டிற்கு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்ல; ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் தமிழ்நாட்டிற்கு இனிமேல் இழப்பு ஏற்பட இருக்கிறது.

அதைப்போன்று கிராமப்புற ஏழை, எளிய தாய் மார்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர்மூச்சாக இருக்கின்ற 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு நிதியைக் குறைத்தது மட்டுமல்லாமல்; வேலை செய்யும் தாய்மார் களுக்குச் ஊதியத்தைக்கூட ஒழுங்காக வழங்காமல் பா.ஜ.க. ஆட்சி இழுத்தடிக்கிறது. இந்த நிலை தமிழ் நாட்டில் மட்டுமில்லை, எல்லா மாநிலங்களிலும் இதே தான் நிலைமை.

அனைத்திற்கும் மேலாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் இப்போது என்ன சொல்லி இருக்கிறார் என்றால், அரசுத் திட்டங்களில் மோடியின் ஒளிப்படத்தை அச்சிடவில்லை என்றால் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவோம் என்கிறார்.

மாநில அரசுகளுக்கு அதிக நிதியாதாரங்களை தருவோம் என்று சொன்ன மோடி ஆட்சியின் உண்மை முகம் இதுதான். மாநிலங்களிடையே ஏற்படும் பிரச் சினைகளுக்குத் தீர்வுகாண கவுன்சில் அமைப்போம் என்றும் சொன்னார்கள். இறுதியில் அந்த கவுன்சிலையும் முடக்கிவிட்டார்கள்.

ஆக, மாநிலங்களின் கருத்தைக் கேட்கவும் மன தில்லை, அரசியல் சட்டம் வழங்கி உள்ள அதிகாரங் களைக் கொண்டு செயல்பட மாநில அரசுகளை விடுவதும் இல்லை.

ஆளுநர் மாளிகையைக் கொண்டு மாநில நிர் வாகத்தை முடக்குவதை ஒரு "ஆக்‌ஷன் பிளான்" ஆக வைத்துள்ளது பாஜக. அதனால்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிறை வேற்றி அனுப்பிவைத்த 19 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருக்க, பா.ஜ.க. ஆளுநரைப் பயன்படுத்துகின்றது. மாநிலங்களின் உரிமையையும் சட்டமன்றத்தின் மாண்பையும் எப்படி எல்லாம் சிறுமை செய்கிறார்கள் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

இப்படி படிப்படியாக, ஒற்றைக் கட்சி, ஒற்றைத் தலைமை, ஒற்றை அதிகாரம் பொருந்திய பிரதமர் என்ற கொள்கையை நோக்கி நாட்டை நகர்த்த முயற்சி செய்கின்றார்கள். ஆக மொத்தத்தில் இந்தப் பா.ஜ.க. ஆட்சியில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு, நம் அரசியல் சட்டம் அளித்துள்ள கூட்டாட்சி  கருத்தியல், ஜனநாயகம் போன்றவை மக்களுடன் சேர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது.

இதில் மோசமான விடயம் என்னவென்றால், மாநிலக் கல்வி உரிமையில் தலையிட்டு, குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடிவருவதுதான். தேசியக் கல்விக் கொள்கை என்ற வடிவில் மாநில அடை யாளங்களை அழிக்கிறார்கள். இத்தனைக் கொடுமை களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உள்ள ஒரே கவசம் மாநில சுயாட்சிதான்.

1974 ஆம் ஆண்டு மேனாள் முதலமைச்சர் முத் தமிழறிஞர் கலைஞர் நாட்டுக்கே முன்னோடியாக மாநில உரிமைகளுக்கு வலுசேர்க்க "ராஜமன்னார் குழு"வை அமைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரைகளை  மாநில சுயாட்சி தீர்மானமாகச் சட்டமன்றத்தில் நிறை வேற்றினார். அதில் மாநில சுயாட்சியைக் கொண்டுவர இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பேரவை முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

இந்தத் தீர்மானத்தைச் சட்டமன்றத்திலும் மேலவை யிலும் நிறைவேற்றினார். அதை ஏற்ற அன்றைய பிரதமர் இந்திரா காந்தி,'These are important issues and we intend to consult all the Chief Ministers' எனச் சொன்னார்.

அந்தத் தருணத்தில்தான் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற முழக்கத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றார். அதைக் காஷ்மீரிலிருந்த ஷேக் அப்துல் லாவும், மேற்குவங்கத்திலிருந்த ஜோதிபாசும் எதிரொலித் தனர். இன்றைக்கு ஆட்சிக் காலத்தில் கடைசிக் கட்டத் தில் உள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் இன் சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது. அதனால்தான் பாஜக அரசமைப்புச் சட்டத்தின் படியும் ஆட்சியை நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்க வில்லை. மாநில உரிமைகள் செழிக்க வேண்டும் என்றால், 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்" என்று நீண்ட உரையை ஆற்றினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.


No comments:

Post a Comment