கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி நேற்று (11.11.2023) கரூரில் அளித்த பேட்டி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கொள்ளையில் ஈடுபடுவதற்காகவே நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்திலும் நடை பயணம் செய்ய பணம் கேட்ட ஆடியோ வெளியாகியுள்ளது. எம்எஸ்எம்இ ஆணையம் என்ற போலி நிறுவனம் நடத்தி பாஜவினரிடமே பணம் வசூல் செய்துள்ளனர். இதற்கும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்பு இருக்கிறது.
இது தொடர்பாக சேலத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள் ளது. ஆனால், ஒன்றிய அரசின் முத்திரை தொடர்பான புகார் என்பதால், ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை பாஜ வழக்குரைஞர் அணி தலைவரே பிணையில் எடுக்கிறார். எந்த பதவியிலும் இல்லாத அண்ணாமலை பெரிய வசூலில் ஈடுபட்டு வருகிறார்.அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுத்து ஒன்றிய அரசு பாதுகாக்கிறது. கரூர்- _ சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கொண்டு வந்தது குறித்த ஆதாரங்களை நான் தருகிறேன். சொந்தம் கொண்டாடும் பாஜ, அதிமுகவினரும் அவர்களது ஆதாரங்களை வெளியிடட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment