இதையொட்டி சத்தீஸ்கரில் உள்ள பெமத்தராவில் 15.11.2023 அன்று நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி,
"ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தும் விவகாரத் தில் பிரதமர் மோடி தனது நிலை பற்றி தெளி வாக எதுவும் கூறவில்லை. ரூ.12,000 கோடி மதிப் பிலான விமானத்தில் பறந்து செல்லும் அவர், தினமும் புதுப் புது ஆடை களை அணிகிறார். பிற்படுத்தப்பட்டவர் என்று கூறிக் கொண்டும் அவர்கள் நலனுக்காக பாடுபடுவேன் என பிர சாரம் செய்தும் பிரதமர் பதவிக்கு தேர்வாகியவர் மோடி. பிற்படுத்தப்பட் டவர்களுக்கான உரிமை வழங்குவதற்கான நேரம் வந்துள்ள நிலையில் பிற் படுத்தப்பட்ட ஜாதிகள் எதுவும் இல்லை, ஏழை கள் மட்டும் தான் இருக் கின்றனர் என்று பிரதமர் கூறுகிறார். மோடி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத் துகிறாரோ இல்லையோ, சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத் தால் ஜாதி வாரி கணக் கெடுப்பு நடத்தப்படும். டில்லியில் காங்கிரஸ் அரசு அமைந்தால், ஜாதி கணக்கெடுப்புக்காக முதல் கையெழுத்து போடப் படும். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு.நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தலித்,பழங்குடியினர் தங்களுடைய உண்மை யான மக்கள் தொகை பற்றி அறிந்து கொண்டால் நாட்டில் பெரிய மாற்றம் ஏற்படும். சுதந்தி ரத்துக்கு பின்னர் எடுக்கப் பட்ட புரட்சிகரமான முடி வாகும் இது’’ என்றார்.
No comments:
Post a Comment