"அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து இனி யாவது அடக்கி வாசிக்க வேண்டும்" என்ற ஆசிரியரின் சாட்டைச்சொடுக்கு அனைத்து ஆளுநர்களின் முதுகு களிலும் சுளீர் என்று வலித்திருக்கும்!
ஆளுநருக்கு ஒரு குழு ஆலாபனை வாசிக்கிறது.
மாநிலத்தில் எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது மக்களால் அவர்களின் தலைவிதியை (நேருவின் மேற்கோள்)அடுத்து வரும் அய்ந்தாண்டுகளுக்கு நிர்ணயித்துக் கொள்ள தேர்ந்தெடுத்துக் கொண்டது என்பதை அக்குழு வசதியாக மறந்து விடுகிறது.எந்த வாக்குறுதிகள் தந்து வாக்காளர்களின் ஆதரவைப்பெற்றார்களோ அவற்றை நிறைவேற்றுவதற்கான சட்டங்களை அவ்வரசு இயற்றுகிறது.
ஆளுநர் அப்போதிருக்கும் ஆட்சியின் தலைவர் என்ற தகுதியில் அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது அவருடைய கடமையாகும்.ஏனெனில் அந்த அரசை எனது அரசு என அவர் நிதி நிலை அறிக்கை உரையில் குறிப்பிடுகிறார் அல்லவா?
இந்த சட்டங்கள் சரியில்லை என்றால்- அவை வாக்களித்த மக்களுக்கு நன்மை பயக்கவில்லை என்றால் அந்த அரசை மக்கள் அடுத்து வரும் தேர்தலில் தோற்கடிக்கப்போகிறார்கள்.ஆக ஒரு சட்டம் சரியில்லை என்றால் அதை தடுத்து நிறுத்தும் அதிகாரம் மக்களுடைய கையில் இருக்கிறதே தவிர ஆளுநர் கையில் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் முடிவுகளுக் கும் தீர்மானங்களுக்கும் கட்டுப்பட்டவர் கடமைப்பட் டவர் ஆளுநர் என்பதை மறக்கலாகாது.
இனியாவது கோணல் புத்தியுடன் குறுக்குச் சால் ஓட்டுவது கோணங்கிகளின் கோமாளித்தனமான இசைக்கு ஏற்ப ஆடுவது இவற்றை ஆளுநர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கோ.அழகிரிசாமி, செம்பனார் கோயில்
No comments:
Post a Comment