17.11.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉 சொத்துரிமை போல ஓய்வூதியமும் ஓர் உரிமைத் தொகையே, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
👉 ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நலத் திட்டங்களை நிறுத்திவிடும், ராகுல் மக்களுக்கு எச்சரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 பத்து மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் நாளை சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்: மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டம், ஒப்புதல் தர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் ஆளுநர்.
👉 பீகார் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி ஒன்றிய அரசு தர வில்லையென்றால், போராட்டம், நிதிஷ்குமார் அறிவிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 ஹிட்லரின் நாஜிகளின் கொள்கைகளையே இப்போது இஸ்ரேலில் உள்ள சியோனிஸ்டுகளும் பின்பற்றி வருவதாகவும், எனவே ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவாரங்களுக்கு அவர்கள் (சியோனிஸ்டுகள்) நெருங்கிய நண்பர்கள் என்றும் அவர்களுடன் மோடி நெருக்கமாக உள்ளார் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்.
தி டெலிகிராப்:
👉 பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதத்தை நம்பி ஏமாற வேண்டாம்.'கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா? அவ ரது உத்தரவாதங்கள் அதானிக்கு; அவர் எதை வேண்டு மானாலும் பெறுவார். உலகப் பட்டியலில் 609ஆவது இடத்தில் இருந்த அதானியை மோடி உலகின் இரண்டாவது பணக்காரர் ஆக்கினார். என பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு.
👉 வகுப்புவாத பதற்றத்தைத் தடுக்கும் வகையில் மத ஊர்வலங்களில் ஆயுதங்கள் மற்றும் உயர் டெசிபல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த பீகார் அரசு தடை
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 பாஜக அல்லாத மாநிலங்களில் பிரதமர் மோடி அந்த மாநில முதலமைச்சர்கள் மீது தனி நபர் தாக்குதல் நடத்துகிறார். தன்னம்பிக்கை இழந்தவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என சரத் பவார் புகார்.
👉 மோடி அரசு தனி சர்னா தர்ம மதமாக அறிவிக்காத தற்கு எதிராக பழங்குடியினர் அமைப்பான ஆதிவாசி செங்கல் அபியான் டிசம்பர் 30ஆம் தேதி பாரத் பந்த் நடத்த முடிவு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment