8 மாத குழந்தைக்கு இதயத்தை தந்த 2 வயது குழந்தை
சென்னை, நவ.24 டில்லியில் மூளைச் சாவு அடைந்த 2 வயது குழந்தையின் இதயம் கொடையாகப் பெறப்பட்டு, சென்னையில் 8 மாதக் குழந்தைக்குப் பொருத்தி எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது:
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் ‘கார்டியோ மையோபதி’ எனப்படும் இதய செயலிழப்பு பாதிப் புக்குள்ளான 8 மாத குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டது.
மருத்துவப் பரிசோதனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அக்குழந்தைக்கான ஒரே தீர்வாக இருந்தது. இந்த நிலையில், டில்லியில் மூளைச் சாவு அடைந்த 2 வயது குழந்தை ஒன்றின் இதயம் கொடையாகப் பெறப்பட்டது. அங்கிருந்து, மூன்றரை மணி நேரத்தில் விமானம் மூலமாகவும், பசுமை வழித்தடம் வாயிலாகவும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு பாதுகாப்பாக இதயம் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனையின் இதயம் - நுரை யீரல் மாற்று சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பால கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அந்த 8 மாதக் குழந்தைக்கு இதயத்தை வெற்றிகரமாக பொருத்தினர்.
தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள அக் குழந்தைக்கு மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு வயதில் ஆயுட்காலம் நிறைவுற்றாலும், இன்னொரு உயிரைக் காப்பாற்ற உறுப்புகளை கொடை யளித்த டில்லி குழந்தைக்கு அனைவரும் இரங்கல் செலுத் தினர் என்று மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment