மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்!
சென்னை, நவ 27- பாஜக ஆட் சியில், சி.பி.அய்., அமலாக் கத்துறை போன்ற விசா ரணை அமைப்புகளின் தவறான செயல்பாடுகள் வெளிப்படையாகவே உள்ளது என்றும், நீதி மன்றத்தில் வாதிடத் தேவை இருக்காது என் றும் மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம் பரம் சாடியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ராஜஸ் தான் மற்றும் தெலங்கா னாவில் காங்கிரஸ் வேட் பாளர்களுக்கு அமலாக் கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது
இதுகுறித்து காங்கி ரஸ் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச் சருமான ப.சிதம்பரம், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
தெலங்கானா தேர் தலில் குறைந்தபட்சம் நான்கு காங் கிரஸ் வேட்பாளர்கள் அம லாக்கத்துறையால் சோத னைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். அவர் களில் ஒருவர் பாஜகவின் தேர்தல் அறிக்கைக் குழு வின் தலைவராக இருந்து நவம்பர் 1ஆம் தேதி பாஜகவில் இருந்து வில கியவர் ஆவார். பாஜக வின் எந்த வேட்பாளரும் விசாரணை அமைப்புக ளால் தேடப்பட வில்லை. பாஜகவின் அனைத்து வேட்பாளர்களும் "கடவுளால்" தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் "தெய்வீக ஆசீர் வாதங்களை"க் கொண்ட வர்கள் என்பது வெளிப் படையானது. பாஜக ஆட்சியில், சி.பி.அய்.அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்ப டையாகவே உள்ளது. நீதிமன்றத்தில் வாதிட தேவையே இருக்காது. இவ்வாறு பசிதம்பரம் சாடியுள்ளார்
No comments:
Post a Comment