நாடாளுமன்றத்தில் பணம் பெற்றுக்கொண்டு கேள்வி கேட்பது என்ற சர்ச்சை பெரிதாக வெடித்துக் கிளம்பியுள்ளது. அது நிரூபிக்கப்பட்டால், எம்.பி., பதவியே பறிக்கப்படும் என்பது எல்லாம் உண்மைதான்.
இதற்கெல்லாம் அவாள் பாஷையில் ‘பிள்ளையார் சுழி' போட்டதே அவாள்தான்.
‘‘சத்தியமூர்த்தி லஞ்சம் வாங்குகிறாராமே'' என்று போகிற போக்கில் சிலர் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். இதை அவரிடமே நேரில் ஒருதரம் சொன்னேன். அவர் கொஞ்சம் கூட என்மீது கோபப்படவில்லை. நிதானமாகப் பதிலளித்தார்.
‘‘நாள் பூராவும் வேலை செய்யவேண்டும். எங்கேயாவது பஞ்சாயத்து தேர்தலென்றால்கூட அதற்கு மேளம் வாசிப்பதற்கு சத்தியமூர்த்தி வரவேண்டும். நான் பணக்காரனில்லை. நான் எப்படிச் சாப்பிடுவது? இந்த நாட்டில் அரசியல் வாதிகளுக்காக ‘கார்னீஜி நிதி'யா வைத்திருக்கிறார்கள்? தேர்தல் தம்பட்ட மடித்து விட்டு நானும், என் குடும்பத்தினரும் வாயு பக்ஷணம் செய்ய முடியுமா? லஞ்சம் யாரிடம் வாங்குகிறேன்? வெள்ளைக்காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு, அல்லது பட்டம், பதவி வாங்கிக்கொண்டு என் தேசத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டேனா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பளியில் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கும். அவனிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்வி கேட்கும் திறமை இருக்கிறது. எப்பொழுதாவது இதைச் செய்தால், இது லஞ்சமாகுமா?'' என்று சத்தியமூர்த்தி பதில் சொன்னார்.
‘பாரத தேவி' (8.12.1943) என்ற இதழில் 79 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தகவல்!
எவ்வளவு சாமர்த்தியமான பதில் பார்த்தேளா?
கேள்வி கேட்க லஞ்சம் வாங்காவிட்டால் நாங்கள் என்ன வாயு பக்ஷணம் செய்ய முடியுமா? என்கிறார்.
புரிகிறதா? காற்றைப் பலகாரம் செய்து சாப்பிட முடியுமா? என்று கேட்கிறார் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள்!
புரியாத மந்திரங்களைச் சொல்லி, நம்மிடம் சுரண்டிச் செல்வதெல்லாம்கூட அவாள் வாயு பக்ஷணம் செய்யாமல் இருப்பதற்குத்தானோ!
புரிஞ்சிச்சோ!
- மயிலாடன்
No comments:
Post a Comment