லக்னோ, நவ.23 உத் தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத் தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், தனது ஆசி ரியர், ‘‘தனக்கு எது வுமே சரியாக சொல் லித் தருவதில்லை. மேலும் தன்னை படிக்கவிடாமல் அடிப் பதாகவும், பிற மாண விகள் முன்பு தன்னை கேலி செய்து மோச மான சொற்களால் திட்டித் தீர்ப்பதாகவும், இவ்வளவு செய்தும் ஏன் படிக்க வருகிறாய், போய் சாகவேண்டியது தானே என்று சொல்கிறார் என்று'' சிறுமி ஒருவர் தனது வீட்டில் புகார் கூறுகிறார்.
ஆனால், தாழ்த்தப்பட்ட சமுகத் தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தினர், பார்ப்பன ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் உள்ளூர் ஊடக நபர் இந்த கொடு மையைக் கண்டு ஆசிரியருக்குத் தெரியாமல் சிறுமியை நாள்தோறும் கொடுமைப்படுத்துவதை படம் எடுத்துள்ளார். பின்னர் சான்று களோடு ஆசிரியரிடம் ‘‘இப்படி ஏன் செய்கிறீர்கள்? அந்தச் சிறுமிக்கு தெரியவில்லை என்றால் சொல்லிக் கொடுக்கவேண்டியதுதானே உங் களின் கடமை? இதற்குத்தானே ஊதியம் கொடுக்கிறார்கள்'' என்று கூற, கோபத்தின் உச்சிக்குச்சென்ற அந்த ஆசிரியர், பள்ளி வளாகத்தில் வைத்து ஊடகவியலாளரை செருப் பால் அடிக்கிறார். அதுமட்டுமல்லா மல் அரசு ஊழியருக்கு பணியில் இடையூறு செய்வதாகக் கூறி புகார் கொடுப்பேன் என்கிறார்.
ஆனால் அவர் ஊடகவியலாளர் அங்கு நடந்த அனைத்து நிகழ்வை யும் படம் சான்றுகளோடு, படம் எடுத்துள்ளார் என்று தெரிந்து கொண்ட நிர்வாகம், ஆசிரியரைச் சமாதானப்படுத்த, மாணவியின் வீட்டில் இருந்து அவர்களின் உற வினர்களை வரவழைத்து, திரும்ப அழைத்துச் செல்லக் கூறியுள்ளனர்; மேலும் ஊடகவியலாளரிடமும் சமாதானம் பேசி உள்ளனர்.
No comments:
Post a Comment