கோவை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் மு.பிரகஸ்பதி நேற்று (15-11-2023) இரவு 9 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கோவை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மலர் மாலை வைத்து கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர். இன்று (16-11-2023) மதியம் 2.30 மணிக்கு கவுண்டன் பாளையம் மின்மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
- - - - -
சிவகங்கை எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் இணையரும், கியூரியின் பாட்டியுமான முனியம்மாள் (வயது 85) அவர்கள் நேற்று (15.11.2023) அதிகாலை சிவகங்கையில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இவருக்கு ராஜா அசுனாமா, அதியமான் என்ற மகன்களும், நீலோற்பலம் ஜெயப் பிரகாஷ் என்ற மகளும் உள்ளனர்.- - - - -
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் - அனகாபுத்தூர் மேனாள் கழக தலைவர் தி.இரா.சிவலிங்கம் அவர்களின் இணையர் சி.கோமளா (வயது 89) மறைவுற்றார் (16.11.2023) என்பதை அறிவிக்க வருந்துகி றோம். அவரது உடலுக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தி, அவர்தம் குடும்பத்தின ருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment