சென்னை, நவ.28 - தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல் வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.
இந்தநிலையில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட் டங்களில் மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப் பியது. இந்த அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் பொதுத் துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், 5 மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் 27.11.2023 அன்று விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக் குரைஞர் துஷ்யந்த் தவே, அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை 28ஆம் தேதி (இன்று) தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அனுப்பிய அழைப் பாணைக்கு தடை விதித்தனர். அமலாக்கத் துறை ஆட்சேப மனுவுக்கு பதிலளிக்க தமிழ் நாடு அரசுக்கு 3 வாரம் அவகாசம் அளித்தனர்.
அழைப்பாணையை எதிர்த்து தமிழ்நாடு அரசும், மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல் செய்த மனுக்களை தள்ளிவைத்து உத்தர விட்டனர்.
No comments:
Post a Comment