உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் - அரசியல் மாண்புகளையும், மாநில உரிமைகளையும் மதிப்பதில்லை ஒன்றிய பிஜேபி அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் - அரசியல் மாண்புகளையும், மாநில உரிமைகளையும் மதிப்பதில்லை ஒன்றிய பிஜேபி அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, நவ. 18 -  "அரசியல் மாண்புகளையோ மாநில உரி மைகளையோ மதிக்காத ஒன் றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசமைப்புச் சட்டமே ஆபத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. 

மதவாத, மொழி ஆதிக்க, மானுட விரோத அரசியல் ஒவ் வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ஆம் ஆண் டில் மக்கள் எழுதப் போகி றார்கள்" என்று திமுக தொண் டர்களுக்கு எழுதியுள்ள கடி தத்தில், அக்கட்சியின் தலை வரும், தமிழ்நாடு முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "உத்தமர் காந்தியைக் கொன்ற கொடியவன் கோட்சே தூக்கி லிடப்பட்ட நாளில், கோட்சே வாரிசுகளின் அரசியல் அதி கார அராஜகத்தை எதிர்த்து, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கை வாரி சுகளான நம் திமுக உடன் பிறப்புகள் உரிமைப் போருக் கான ஆற்றல் மிக்க ஜனநாயகப் படையின் வீரர்களாக இரு சக்கர வாகனத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

நவம்பர் 15ஆ-ம் நாள் குமரி முனையில் தொடங்கிய இந்தப் பேரணி தென்மாவட்டங்களை உள்ளடக்கிய வள்ளுவர் மண் டலத்திலும், மேற்கு மாவட்டங் களை உள்ளடக்கிய பெரியார் மண்டலத்திலும், வடமாவட் டங்களை உள்ளடக்கிய அண்ணா மண்டலத்திலும், காவிரிப் படுகை மாவட்டங்களை உள்ளடக்கிய கலைஞர் கருணாநிதி மண்ட லத்திலுமாக 234 தொகுதி களுக்கும் 13 நாட்களில் சென்று, மொத்தமாக 8 ஆயிரத்து 647 கிலோ மீட்டர் பரப்புரை பய ணம் மேற்கொண்டு நவம்பர் 27ஆ-ம் நாள் சேலத்தில் நிறை வடைகிறது.

அந்த சேலத்தில்தான் டிசம் பர் 17-ஆம் நாள் இளைஞரணி யின் இரண்டாவது மாநில மாநாடு - மாநில உரிமை மீட்பு மாநாடாக எழுச்சிமிக்க இளை யோரின் புதுப் பாய்ச்சலுடன் நடைபெறவிருக்கிறது.

எண்ணற்ற போராட்டங்கள்

தாய்க் கழகத்துக்குப் பெயர் சூட்டப்பட்ட சேலம் மாநகரில் இளைஞரணியின் இரண்டா வது மாநில மாநாடு நடை பெறவிருக்கும் நிலையில், உங்க ளில் ஒருவனான நான் ஒரு தாயின் மனநிலையுடன் காத்தி ருக்கிறேன். இன்று திமுகவின் தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்களின் பேரன்புடன் பொறுப்புகளை வகித்தாலும் ஏறத்தாழ 35 ஆண் டுகள் திமுக இளைஞரணியை சுமந்தவனல்லவா, அது பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, உயர்ந்து நிற்கும் காலம் வரை அதன் வளர்ச்சி ஒன்றே என் சிந்தனை யாக, செயல்பாடாக அமைந் தது.

ராபின்சன் பூங்காவில் தொடங்கிய இயக்கத்தின் தொடர்ச்சிதான் ஜான்சிராணி பூங்காவில் உருவான இளை ஞரணி. “விருப்பமுள்ளவராம் பதவியில் பல பேர். அவர் வேண்டாம்! நெருப்பின் பொறி களே! நீங்கள்தாம் தேவை!’ என்று தலைவர் கலைஞர் தன் 21-ஆம் வயதில் இளைஞராக இருந்தபோது எழுதிய கவிதை வரிகளுக்கேற்ப, கட்சியின் துணை அமைப்பாகவும், எந்த நெருக்கடியிலும் துணை நிற் கும் அமைப்பாகவும் திகழ்ந்தது இளைஞரணி. தலைவர் கலை ஞர் ஆணையிட்டால் ஏவு கணை போல எதிரிக் கூட்டம் நோக்கிப் பாயும் பட்டாளமாக இளைஞரணி செயல்பட்டது. திமுக அப்போது எதிர்க் கட்சியாக இருந்தது.

தலைவர் கலைஞர் சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், மக்கள் மன தில் தமிழினத் தலைவராகவும் வீற்றிருந்தார். தமிழ்நாட்டின் அரசியல் சக்கரத்தைச் சுழற் றும் அச்சாணியாகத் திகழ்ந் தார். அவர் ஆணையிட்டால் போதும், அரை நாள் அவகா சத்தில் பல லட்சம் பேர் குவிந்துவிடுவார்கள். 

ஊர்வலமா, கண்டன ஆர்ப் பாட்டமா, மறியலா, மாநாடா எதுவாக இருந்தாலும் அந்த லட்சம் பேரில் லட்சியப் படை வீரர்களாக இளைஞரணியின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இலங்கைத் தமிழர் உரிமை காக்கும் போராட்டம், ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்க்கின்ற போராட்டம், ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத போராட்டம் எனக் கட்சி முன்னெடுக்கும் களங்களில் இளைஞரணி முனைப்புடன் பங்கேற்கும்.

‘வெட்டி வா என்றால் கட்டி வரக் கூடியவர்கள் என் உடன் பிறப்புகள்’ என்று தலைவர் கலைஞர் சொல்வார். இளைஞ ரணி எனும் கொள்கைப் படை வெட்ட வேண்டியதை வெட்டி, அவற்றை முறையாகக் கட்டி, வீச வேண்டிய இடத்தில் வீசிவிட்டு, கடமையை நிறைவேற்றிய வீரர்களாகத் தலைவர் கலை ஞர் முன் நிற்கும்.

தான் வளர்த்த பிள்ளை, தன் தோளுக்கு மேல் வளர்ந்து, தானே தன் கடமைகளை முனைப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றும் ஆற்றலைப் பார்த்து மகிழும் தாயின் மன நிலையுடன், தம்பி உதயநிதி யையும் அவர் தலைமையிலான இளைஞரணியில் உள்ள ஒவ் வொருவரின் செயலாற்றலை யும் கண்டு மகிழ்கிறேன்.

ஆபத்தில் அரசமைப்புச் சட்டம்

அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக் காத ஒன்றிய ஆட்சியாளர்க ளால் இந்திய அரசமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக ளையும் கூட மதிக்காத நிய மனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. மதவாத, மொழி ஆதிக்க, மானுட விரோத அரசியல் ஒவ் வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ஆம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள்" என்று அக்கடி தத்தில் முதலமைச்சர் கூறியுள் ளார்.

No comments:

Post a Comment