புதுடில்லி, நவ.30 சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து தி.மு.க. மேனாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட் டதை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தொட ரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1996_-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்த வீர பாண்டி ஆறுமுகம் மீது வருமானத் துக்கு அதிகமாக சொத்துக் குவிப் பில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கை சேலம் தலைமை குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் விசாரித் தது. அந்த வழக்கில் குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி வீரபாண்டி ஆறுமு கத்தை விடுவித்து கடந்த 2008 நவ.6 அன்று நீதிமன்றம் உத்தர விட்டது.
இதேபோல தற்போதைய அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசா ரித்த வேலூர் சிறப்பு நீதிமன்றம், அவரை வழக்கில் இருந்து விடு வித்து கடந்த 2007 மார்ச் 22 அன்று உத்தரவிட்டது. இதில் வீர பாண்டி ஆறுமுகம் விடுவிக்கப்பட் டதை எதிர்த்து சேலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும், அமைச்சர் துரைமுருகன் விடுவிக் கப்பட்டதை எதிர்த்து மது ரையைச் சேர்ந்த கோவிந்தன் என் பவரும் சென்னை உயர் நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் மூன்றா வது நபர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது எனக்கூறி தள் ளுபடி செய்தது.
இதேபோல அமைச்சர் கே.என்.நேரு கடந்த 1996-_2001 தி.மு.க. ஆட்சி காலத்தில் வருமா னத்துக்கு அதிகமாக ரூ.4.61 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2006-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். மேலும் 1996_-2001 காலகட்டத்தில் அமைச்சர்களாக பதவி வகித்த தற்போதைய அமைச்சர்கள் அய்.பெரியசாமி, எஸ்.ரகுபதி ஆகியோரும் வழக்கில் இருந்து கடந்த 2007ஆ-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். இதேபோல மேனாள் அமைச்சர் கோ.சி.மணி, மதுரை மேனாள் மேயர் குழந்தை வேலு ஆகியோரும் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஆறுமுகம், கோவிந்தன் மற்றும் அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு தள்ளுபடி செய் தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்குரைஞர் குமணன் ஆஜராகி வாதிட்டார். அதை யடுத்து நீதிபதிகள், இந்த வழக் குகளில் சென்னை உயர் நீதிமன்றம் தீர ஆய்வு செய்தபிறகே குற்றம் சாட்டப்பட்டவர்களை விடு வித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பில் காலதாமதமாக மேல் முறையீடு செய்யப்பட்டுள் ளது. உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 1,324 நாட்கள் முதல் 1,859 நாட்கள் வரை காலதாமதம் ஏற்பட்டுள் ளது. எனவே இந்த மேல்முறை யீட்டு வழக்குகள் ஏற்புடையதல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளனர்.
No comments:
Post a Comment