பெரியார் பெருந்தொண்டர் மேனாள் திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர், 'பெல்' திராவிடர் தொழிலாளர் சங்க மேனாள் செயலாளர் பெல்.வரதராசன் (வயது 85) இன்று (18.11.2023) அதிகாலை நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரத்தில் மறை வுற்றார் - ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித் துக் கொள்கிறோம். திருவெறும்பூர் 'பெல்' நிறுவனத்தில் பணியாற்றியபோதும், ஓய் வுக்குப் பிறகும் இயக்கப் பணியில் ஆர்வத் துடன் செயல்பட்டவர் பெரியார் பெருந்தொண்டர் வரதராசன் ஆவார்.
அவரது பிரிவால் வருந்தும் அவரது வாழ்விணையர் வ.காந்திமதி மற்றும் மகள்கள் தாமரை நாயகி-ரவி (காவல் துறை, சென்னை), தாமரை செல்வி-குமரவேல் (பொறியாளர், திருச்சி), தாமரை கிருஷ்ணவேனி-மூர்த்தி (குவைத் கேம்ப்) ஆகியோருக்கும் மற்றும் உறவினர்களுக்கும், கழக தோழர்களுக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
18.11.2023
No comments:
Post a Comment