இந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு பிரச் சாரத்துக்காக காங்கிரஸ் முக்கிய தலைவரும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி ஜெய்ப்பூர் சென்றார். அப்போது அவரை அம்மாநில முதல மைச்சர் அசோக் கெலாட்டும், மேனாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டும் ஒன்றாக இணைந்து வரவேற்றனர்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள காட்சிப் பதிவு ஒன்றில், முதலமைச்சர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் ராகுல் காந்திக்கு இருபுறமும் நிற்கின்றனர். அவர்கள் இரு வரும் ராகுல் காந்தியை முதலில் போகச் சொல்ல, ராகுல் அவர் களை முதலில் போகச் சொல் கிறார்.
இதனைத் தொடர்ந்து முன்னே சென்ற ராகுல் காந்தி செய்தியா ளர்கள் அழைப்பதைக் கண்டு திரும்பி, "நாங்கள் ஒன் றாக மட்டும் இல்லை, ஒற்றுமை யாகவும் இருக்கிறோம். இருப்போம். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை வெற்றி பெரும்" என்று தெரிவித் தார்.
தேர்தலுக்கு முன்னதாக ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் அவ ரது மேனாள் துணை முதலமைச் சர் சச்சின் பைலட்டுக்கும் இடை யில் மோதல் இருப்பதாக ஊகங்கள் நிலவி வந்தன. இந்த நிலையில், அசோக் கெலாட் தனது எக்ஸ் பக்கத்தில் அவர், சச்சின் பைலட் மற்றும் மாநில காங்கிரஸ் தலை வர்களுடன் கலந்துரையாடும் படம் ஒன் றைப் பகிர்ந்திருந்தார். அதில்; ஒற்றுமை, மீண்டும் வெற்றி பெறுவோம்' என்று குறிப்பிட் டிருந்தார். 15.11.2023 அன்று இந்தப் பதிவு வெளியான நிலை யில், ராகுல் காந்தியின் இந்த ஒற்றுமை குறித்தப் பேச்சு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
No comments:
Post a Comment