பெரியார் மருந்தியல் கல்லூரியில் - 'வரலாற்றில் வெற்றித்தடம் பதித்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரியில் - 'வரலாற்றில் வெற்றித்தடம் பதித்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா'

திருச்சி, நவ.30- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிடமாணவர் கழகம் இணைந்து நடத்திய ‘வரலாற்றில் வெற் றித்தடம் பதித்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா’ 23.11.2023 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரிஅரங்கத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந் தியல் கல்லூரியின் திராவிடமாணவர் கழகத் தலைவர் இல.அனிதா வரவேற் புரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தமதுதலைமையுரையில் “அனைவருக்கும் அனைத்தும்”என்ற சமூநீதிக் கொள்கையை இந்தியா முழு மைக்கும் செயல்படுத்த மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருந்த போராட் டம் வைக்கம் போராட்டம் என்றும் அப்போராட்டம் நிறைவுபெற்ற நவம் பர் 23ஆம் தேதியான இன்றைய நாளி லேயே பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் பெரியார் மருந்தியல் கல்லூரியில் நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சியடைவதாகவும் உரை யாற்றினார்.

மேலும் ஒரு ஆண்டு முழுவதும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா வினை கொண்டாட தமிழ்நாடுஅரசுஅறிவித்திருப்பது பெரியார் கல்விக் குழுமத் தில் இணைந்திருக்கும் நம் அனைவருக் கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை என்றும் மானுடம் செழிக்க ஏற்றத் தாழ்வுகளை களைந்த இவ்வரலாற்று நிகழ்ச்சியினை மாணவர்கள் அனைவ ரும் மற்றவர்களிடத்தில் கொண்டு செல்வதுடன் சமூகநீதியை நிலைநாட் டிட பாடுபடவேண்டும் என்றும் கேட் டுக் கொண்டார்.

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள்...

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தின ரும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந் தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநரு மான பேராசிரியர் முனைவர் நம்.சீனி வாசன் _ சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் எங்கு நடந்தாலும் அதனை எதிர்த்து முதலில் குரல் கொடுப்பவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்றும் தாம் உயர்ந்த குலத்திலும் செல்வச் செழிப்பி லும் பிறந்திருந்தாலும் தாழ்த்தப்பட்ட வர்களுக்காவும் ஒடுக்கப்பட்டவர்களுக் காகவும் பாடுபட்ட ஒப்பற்றத் தலைவர் தந்தை பெரியார் என்றும் உரையாற்றி னார். அப்படி ஒதுக்கப்பட்ட இனத்தின் உரிமைக்காக கேரள மாநிலம் வைக்கம் என்ற ஊரில்அறப்போராட்டம் நடத்தி வெற்றி கண்ட தலைவர்தான் தந்தை பெரியார். 

வைக்கம் போராட்டம்...

வைக்கம் என்ற ஊரில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் கோவில் தெருக்க ளில் நடப்பதற்கும் கருவறைக்குள் நுழை வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பெரும் கிளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் அப்போராட்டத்திற்கு தந்தை பெரியார்  தலைமையேற்று அது, வெற்றி பெறும்வரை சிறைத் தண்டனைகளை யும் பல இன்னல்களையும் அனுபவித் துப் போராடியவர் பெரியார். அத னால்தான் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.

தமிழினத்திற்கு கிடைத்த வெற்றி

இன்றைக்கு தமிழ்நாடு அரசு வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறா வது ஆண்டு துவக்கத்திலிருந்து முடியும் வரை ஓர் ஆண்டு முழுவதும் வெற்றிவிழாவாக கொண்டாட அறிவித்திருப் பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் கிடைத்த பெருமை, மகிழ்ச்சி என்றும் உரையாற்றி, வைக்கம் போராட்ட வர லாற்றினை கால வரிசைப்படி விளக்கி னார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் அவர்களின் வாழ்விணையரும்,  தமிழ்த்துறை பேராசி ரியருமான  ஜோதி, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேரா சிரியர் எம்.செண்பகவள்ளி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில்ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மருந்தியல் கல்லூரி மற்றும் நாகம்மை ஆசிரியர் பயிற்சிநிறுவன பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் திரா விட மாணவர் கழகத்தின் செயலாளர் ரெ.இலக்கியா நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து எழுதிய வைக்கம் போராட்டம் குறித்த பெரியார் திரைப் படப் பாடல் ஒலிபரப் பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment