சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (27.11.2023) நடைபெற்ற வி.பி.சிங் சிலை திறப்பு விழா வில் உத்தரபிரதேச மேனாள் முதலமைச்சர் அகி லேஷ் யாதவ் பேசியதாவது:- வி.பி.சிங்கிற்கு சிலை திறந் திருப்பதன் மூலம் அவரது மரபை நீங்கள் முன் னெடுத்து செல்வதற்கு பாராட்டு தெரிவித்துக் கொள் கிறேன். நாட்டின் புகழ்பெற்ற கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் சிலை திறக்கப்பட்டுள்ளதற்கு நன்றி.
உங்களின் தலைவரும் தமிழ்நாட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு 27 சதவீதம் மட்டு மல்லாது அதனை உயர்த்துவதற்கான பணிகளையும் செய்துள்ளதை நினைவு கூர வேண்டும்.
அதாவது மண்டல் ஆணைய பரிந்துரை அமல்படுத்தப்பட்டபோது இந்தியாவே பற்றி எரிந்தது. ஆனால், தென் னிந்தியாவில் குறிப்பாகதமிழ் நாட்டில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலராக கலைஞர் திகழ்ந்தார். கலைஞர்போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னும் குரல் கொடுத்து வருவது பாராட்டத்தக்கது.
பெரியார், அண்ணா, கலைஞர் பாதையில் மக்கள் உரிமைக்கான வி.பி.சிங்கின் போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு காலம், காலமாக மறுக்கப்பட்ட உரிமைகளை மண்டல் ஆணையம் மூலமாக பெற்றுத் தந்த வி.பி. சிங்கிற்கு சிலை அமைத்துள்ளது உண்மையில் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment