இந்தியாவில் 500இல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு பல விதமான சிறப்பு பயிற்சி வகுப்பு இருந்தாலும் இவர்களின் வாழ்க் கையினை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக சென்னையைச் சேர்ந்த ரம்யா நிமயா இன்னொ வேஷன்ஸ் என்ற பெயரில் ஆட்டிசம் குழந்தை களுக்காக சிறப்பு ரோபோடிக்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளார்.
பொதுவாகவே பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தை மேல் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். நன்கு படிக்கவேண்டும் பாட்டு, நடனம், நீச்சல் என பல்வேறு கலைகளில் ஈடுபடவேண்டும் என அவர்களின் விருப்பத்தை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
சாதாரண குழந்தைகளுக்கு இவை எல்லாம் சாத்தியம். ஆனால், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு ரோபோ போன்ற உதவிகள் தேவை.
பி.எச்.டியில் பிராஜெக்டாக நான் செய்தது தான் இப்போது நிறுவனமாக மாறியுள்ளது என்று கூறும் ரம்யா, ரோபோடிக்ஸ் பிரிவில் எம்.டெக் முடித்துள்ளார்.
No comments:
Post a Comment