ஆடம்பர கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

ஆடம்பர கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, நவ. 18- இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் எந்த வகையான காராக இருந்தாலும் வாடகைக்கு பயன்படுத்தலாம்.

தமிழ்நாட்டை பொறுத்து வரை குறிப்பிட்ட வகை கார்கள் மட்டும் மஞ்சள் போர்டாக பதிவு செய்ய முடியும். தற்போது அந்த நிலையை மாற்றி சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாடகைக்கு பயன்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதுவரை ஸ்விப்ட், மாருதி சுசுகி, டாடா இண்டிகோ மற்றும் வேகன் ஆர் கார்கள் மட்டுமே மஞ்சள் போர்டுடன் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சொகுசு கார்கள் உட்பட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி யுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு போக்கு வரத்து துறை ஆணையர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் " இந்த உத்தரவு மூலம் குறிப்பிட்ட கார் வகைகளை மட் டுமே வாடகை கார்களாக பயன் படுத்த முடியும் என்ற விதி மாற்றப் படுகிறது. இதன்மூலம் மற்ற மாநி லங்களைப் போல் தமிழ்நாட்டிலும் சொகுசு மற்றும் ஆடம்பரம் கார் கள் உட்பட அனைத்து வகை கார்களையும் பொதுப் போக்கு வரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள லாம்.

"தமிழ்நாட்டில் சுற்றுலாவை விரும்பும் பயணிகள் தங்களுக்கு பிடித்த சொகுசு மற்றும் ஆடம்பர கார்களில் வாடகை முறையில் பய ணிக்க முடியவில்லை என்ற குறை இருந்து வருகிறது. இதனை கருத் தில் கொண்டு மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் அனைத்து வகை கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்க ளாக அதாவது மஞ்சள் போர்டு பதிவு செய்து வாடகைக்கு பயன் படுத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment