பாடத் திட்டத்தில் ராமாயணம் - மகாபாரதமாம் என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரையாம்
புதுடில்லி, நவ.23 ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சி இஆர்டி) பள்ளிக் கல்வி தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என்று என்சிஇஆர்டி பரிந்துரைத்துள் ளது.
என்சிஇ ஆர்டி அமைப்பின் தலைவர் அய்சக் இது குறித்து கூறிய தாவது:- சமூக அறிவியல் பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபா ரதம் போன்ற இதிகாசங்களை சேர்த்து மாணவர்களுக்கு கற்பிக்க குழு வலியுறுத்தியுள்ளது. பதின்ம வயது (டீன் ஏஜ்) பருவத்தில் மாணவர்கள் தங்கள் சுயமரியாதை, தேசபக்தி மற்றும் தேசத்தின் பெருமையை வளர்த்துக்கொள் கிறார்கள் என்று நாங்கள் நினைக் கிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாண வர்கள் நாட்டை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் குடியுரிமை பெறுவ தற்கு அவர்களிடையே தேசபக்தி இல் லாததே காரணம். எனவே, அவர்கள் தங்கள் வேர்களைப் புரிந்துகொள்வ தும், அவர்களின் தேசம் மற்றும் கலா சாரத்தின் மீதான அன்பை வளர்ப்பதும் முக்கியம். எங்கள் முன்னுரை ஜன நாயகம் மற்றும் மதச்சார்பின்மை உள்ளிட்ட சமூக விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அது உன் னதமானது. எனவே, வகுப்பறைகளின் சுவர்க ளில் அதை (ராமாயணம், மகா பாரதம் போன்ற இதிகாசங்களை) எழு துவதற்கு நாங்கள் பரிந்துரைத்துள் ளோம். இதனால் அனைவரும் புரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் முடியும். இவ்வாறு அய்சக் கூறினார்.
No comments:
Post a Comment