ஒன்றிய பிஜேபி அரசின் சாதனை இதுதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

ஒன்றிய பிஜேபி அரசின் சாதனை இதுதான்!

அந்நிய நேரடி முதலீடு 24% சரிவு!

புதுடில்லி, நவ.23- இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஅய்) 2023 ஏப்ரல்-செப்டம்பரில் 24 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 2,048 கோடி டாலராக உள்ளது.

இது, கடந்த 2022-2023 ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களோடு ஒப்பிடுகையில் 24 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தியாவில் 2,691 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள், தொலைத் தொடர்பு, ஆட்டோ, ஃபார்மா ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து குறைந்தது. இது, ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு சரிவைக் காண்பதற்குக் காரண மாக அமைந்தது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண் டிலும் அந்நிய நேரடி முதலீடு வரத்து 40.55 சதவீதம் குறைந்து 928 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்திலும் இது 34 சதவீதம் சரிந்து 1,094 கோடி டாலராக இருந்தது.

கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் அந்நிய நேரடி முதலீடுகள் சரிந்தன. எனினும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் (297 கோடி டாலர்) ஒப்பிடுகையில் நடப்பாண்டின் அதே மாதத்தில் அந்நிய நேரடி முதலீடு 408 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்கா, பிரிட்டன், அய்க்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், மொரிஷிஸ் உள்ளிட்ட முக்கிய நாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டு வரத்து குறைந்துள்ளது.

எனினும், நெதர்லாந்து, ஜப்பான், ஜெர்மனியில் ஆகிய நாடுகளில் இருந்து நேரடி முதலீட்டு வரத்து அதிகரித்தது.

துறை ரீதியில், நடப்பு நிதியாணடின் முதல் பாதியில் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், வர்த்தகம், சேவைகள், தொலைத்தொடர்பு, ஆட்டோமொபைல், ஃபார்மா, ரசாயனங்கள் ஆகிய துறைகளில்அந்நிய நேரடி முதலீடு குறைந்தது.

எனினும், கட்டுமான (உள்கட்டமைப்பு) நடவடிக் கைகள், கட்டுமான மேம்பாடு மற்றும் உலோகவியல் தொழில் ஆகிய துறைகளில் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட முதலீடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மதிப்பீட்டு அரையாண்டில் அந்நிய நேரடி முத லீடுகளை ஈர்த்ததில் மகாராட்டிரம் முதலிடம் பிடித்தது. அந்த மாநிலத்தில் ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் அதிகபட்சமாக 795 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டது. எனினும், இந்த மாநிலத்தில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 800 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும்.

மகாராட்டிரத்துக்கு அடுத்தபடியாக கருநாடகத்தில் அந்நிய நேரடி முதலீடு 532 கோடி டாலரிலிருந்து 284 கோடி டாலராக சரிந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment