ஜெய்ப்பூர், நவ. 23 காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் வழக்கம்போல அசோக் கெலாட்டை முதலமைச்சர் வேட் பாளராக அறிவித்து அவரது தலை மையில் தேர்தலை எதிர் கொள் கிறது.
ஆனால், பாஜக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர் தலை சந்திக்க உள்ளது. இதற்கு காரணம் ராஜஸ்தான் பாஜகவில் நிலவும் உச்சகட்ட கோஷ்டி பூசல் ஆகும். ராஜஸ்தான் பாஜகவில் மேனாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையில் ஒரு அணி, ஒன்றிய அமைச்சர்கள் தலைமை யில் மற்றொரு அணி என இரு அணிகள் உள்ளன. இதன்காரண மாகவே இன்னும் பாஜக தரப்பில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக் கப்படவில்லையோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது வெளி யாகியுள்ள புதிய தகவலின் அடிப் படையில் ராஜஸ்தான் பாஜக 2 கோஷ்டியாக அல்ல, மொத்தம் 6 கோஷ்டிகளாக பிரிந்துள்ளது என்பதுதான்.
பாஜக முத லமைச்சர் வேட் பாளர் போட்டி யில் வசுந்தரா ராஜே மட்டும் இல்லை. அவரு டன் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகா வத், பாஜக மூத்த தலைவர்கள் பாலக்நாத், ராஜேந்திர ரத்தோர், சதீஷ் பூனியா, சி.பி.ஜோஷி என மேலும் 5 பேர் போட்டியில் உள்ளனர். வசுந்தரா ராஜே தவிர்த்து மற்ற 5 பேர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு வந்தால் மட்டுமே ஒன்றாகக் கூடுவார்கள். மற்ற நேரங்களில் 6 கோஷ்டிகளாக பிரிந்து பிரச்சாரம் செய்வார்கள். இதில் வசுந்தரா ராஜே பிரதமர் மோடியின் கூட்டங்களில் கூட ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்பதே முக்கியமான விஷயம் ஆகும்.
ராஜஸ்தான் பாஜகவில் இவ் வளவு பெரிய கோஷ்டி பூசல் இருந் தும், காங்கிரஸ் கட்சியில் முன்னர் இருந்த அசோக் கெலாட் - சச்சின் பைலட்டின் பகைமையை தற் போதும் கூறி பாஜக பிரச்சாரம் செய் வது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் அவர்கள் ஒரே மேடை யில் பிரச்சாரம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment