இலங்கையில் 38 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை ஆனால் விசித்திரமான தீர்ப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

இலங்கையில் 38 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை ஆனால் விசித்திரமான தீர்ப்பு

5

ராமேசுவரம், நவ.10- இலங்கை சிறையில் அடைக்கப் பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 38 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக் கப்படுவதாகவும், 5ஆண்டு கழித்து தண்டனை அமல்படுத் தப்படும் என்றும், தற்போது ஊர் திரும்பலாம் எனவும் இலங்கை நீதிமன்றம் வித்தியாச மாக உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 9 விசைப் படகுகளில் மீன் பிடிக்க சென்ற 64 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மீன வர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் பல்வேறு கட்டபோராட்டங் களை நடத்திய நிலையில், இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் (8.11.2023) 26 மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 4 பேர் நிபந் தனையுடன் விடுவிக்கப்பட்ட நிலையில், 22 பேருக்கு 15-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். விழாவின் போது 26 பேரும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், காவல் நீட்டிப்பு உத்தரவு ஏமாற்றம் அடையவும் செய்தது.

38 மீனவர்களுக்கு சிறை 

இந்த நிலையில், ராமேசு வரத்தை சேர்ந்த மற்ற 38 மீனவர்களும் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர்.

அப்போது நீதிபதி பிறப் பித்த உத்தரவில், "எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக் குள் மீன் பிடித்த 38 மீனவர்களுக் கும் ஒன்றரை ஆண்டு கடுங் காவல் தண்டனை விதிக்கப்படு கிறது. இருந்தாலும், அந்த தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த தண்டனை 5ஆண்டுகளுக்குப் பிறகு அமல்படுத்தப்படும். இனி கண்டிப்பாக  எல்லை தாண்டி மீன்பிடிக்க வரக் கூடாது. மீனவர்களின் படகு களின் மீதான விசாரணை டிசம்பர் 13-ஆம் தேதி நடை பெறும்' என்று கூறப்பட் டுள்ளது.

பொதுவாக இலங்கை நீதி மன்றம் மீனவர்களை விடுவிக் கும்போது, இனி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தால் சிறை தண்டனை விதிப்போம் என எச்சரிக்கும் ஆனால், நேற்று சிறை தண்டனை விதித்து, அதை நிறுத்தி வைப்பதாக உத்தர விட்டு இருப்பது மீனவர்களை மேலும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. 

விரைவில் தமிழ்நாடு வருகை

நேற்று முன்தினம் (8.11.2023) 4 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று 38 மீனவர்கள் ஊர் திரும்ப இலங்கை நீதி மன்றம் அனுமதித்து இருப்ப தால், 42 மீனவர்களும் விரை வில் விமானம் மூலம் தமிழ்நாடு அழைத்து வரப்படு வார்கள் என்று தெரிகிறது. இந்த 42 பேரும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் நேற்று ஒப் படைக் கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. 

அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்தது குறித்து ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப்படகு மீன வர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசு ராஜா கூறியதாவது:- 

கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் தமிழக மீன வர்கள் மீன்பிடிக்க வரக்கூடாது என்று மீனவர்களை மிரட்டும் வகையிலும் அவர்களுக்கு அச் சுறுத்தும். வகையிலும் இது போன்று மீனவர்களுக்கு கடுங் காவல் சிறை தண்டனை விதித்து ஒரு உத்தரவை இலங்கை நீதிமன்றம் பிறப் பித்து இருக்கிறது. மீனவர்களை நாடு கடத்தும் உத்தரவாகவே நாங்கள் பார்க்கிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் நாடு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசுடைமை ஆக் கப்படும் நிலையில், தற்போது சிறை தண்டனை விதித்து நிபந்தனையுடன் விடுவிப்பது என்பது மீனவ மக்கள் மத்தியில் பயத்தையும், வேதனையையும் ஏற்படுத்தும். 

தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசு டைமை, மீனவர்களுக்கு சிறை தண்டனை போன்றவற்றை ரத்து செய்ய ஒன்றிய அரசு, இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண் டும். இலங்கை சிறையில் உள்ள மற்ற 22 மீனவர்களை யும், தமிழ்நாட்டு மீனவர்களின்  படகுகளை விடுவிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment