சென்னை,நவ.30- தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கலைக் கழகத்தின் கூட்டத்தில் 276 கலைச்சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல் அளித் துள்ளது.
தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில் தமிழ்க் கலைக் கழகத்தின் 145-ஆவது கூட்டம் சென்னையில் உள்ள அகரமுதலி இயக்கக அலுவலகத்தில் இயக்குநர் கோ.விசயராகவன் தலைமையில் 27.11.2023 அன்று நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் அலுவல்சாரா உறுப்பினர் களான புலவர் வெற்றியழகன், முனைவர் கு.பாலசுப்பிர மணியன், முனைவர் இரா.கு. ஆல்துரை, நா.சு.சிதம்பரம் மற்றும் அலுவல்சார் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள 276 தமிழ்க் கலைச் சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தச் சொற்கள் சொற்குவை தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
No comments:
Post a Comment