சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம் இஸ்ரோ திட்ட இயக்குநர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம் இஸ்ரோ திட்ட இயக்குநர் தகவல்

சேலம், நவ.30 -  லாக்ராஞ்சியன் பாயின்ட் என்ற இடத் தில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், அங் கிருந்தபடி, சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்று சேலம் புத்தகத் திருவிழா வில், இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி தெரிவித்துள்ளார். 

சேலத்தில் நடைபெற்று வரும் சேலம் புத்தகத் திருவிழா வில், முதன்மை விருந்தினர் களைக் கொண்டு தினமும் கருத்துரை நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. இதில், ‘விண்வெளிப் பயணத்தின் சவால் கள்’ என்ற தலைப்பில், இஸ்ரோ வின் ஆதித்யா எல்- 1 திட்ட இயக் குநர் நிகர் ஷாஜி கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களிடம் கலந்து ரையாடினார். மாணவர்க ளுக்கு பதிலளித்து நிகர் ஷாஜி கூறியது: 

சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் மூலம் சூரியனின் வெப்ப சூழல், கதிர் வீச்சு, காந்தப்புயல் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய முடியும்.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான பகுதி ஈர்ப்பு விசை சமமாக இருக்கக் கூடிய லாக்ராஞ்சியன் பாயின்ட் என்ற இடத்தில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத் தப்பட்டுள்ளதால், அங்கிருந்தபடி, சூரியனை 24 மணி நேரமும் கண் காணிக்க முடியும்.

இயற்கை பேரிடர்கள் கணிப்பு: இதன் மூலம் பல்வேறு இயற்கை பேரிடர்களை கணிக்க முடிவதுடன், விண்வெளியில் உள்ள விண்கலங்களுக்கு, வெப்ப கதிர் வீச்சால் பாதிப்பு ஏற்படுவதை யும் தடுக்க முடியும். சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவப் பகுதியில் மென்மையானதரையி றக்கம் செய்யும் ஆய்வு வெற்றிகர மாக செய்யப்பட்டுள்ளது. 

இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்கள் மூலம் பல ஆய்வு களை மேற்கொண்டு வருகிறது என்றார்.  நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி திட்ட) அலர் மேல்மங்கை, மகளிர் திட்ட இயக் குநர் பெரியசாமி மற்றும் அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர்.

No comments:

Post a Comment