பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம், டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி யுதவி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் கள்.
இந்த மகப்பேறு நிதியுதவி திட்டம் படிப்படியாக இன்று இந்தியா முழுமைக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவும் திட்ட மாக மாறியுள்ளது.
2006ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்த திட்டத்தில் ரூ.6000- வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 2011-2012 ரூ.12,000- மற்றும் தற் பொழுது ரூ.18,000-ஆக உயர்த்தி முதல் இரு கர்ப்பத்திற்கு அய்ந்து தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.
2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தனது பங்களிப்பாக ரூ.3000 வழங்கியது. இதோடு மாநில அரசின் பங்களிப்பு ரூ.15000த்தோடு சேர்த்து ரூ.18,000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் 14,000 ரூபாய் ரொக்கமாகவும், ரூ.4000 மதிப் பிலான 2 ஊட்டச்சத்து பெட் டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
2018க்கு பிறகு 5 தவணைகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பம் தரித்த 3ஆவது மாதம் ரூ.2000-மும், 4ஆவது மாதம் ரூ.2000-மும், குழந்தை பிறந்தவுடன் ரூ.4000-மும், குழந்தை பிறந்து 3 மாதம் கழித்து ரூ.4000-மும், 9 மாதம் கழித்து ரூ.2000 என்று ரூ.14,000த்தோடு ரூ.4000 மதிப் பிலான 2 பெட்டகங்கள் வழங்கப் பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்படுத்திய திட்டம் என்பதால், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.ளி என்ற இரண்டு திட்டங்களும் ஒருங்கிணையும் போது, பயனாளிகளின் பட்டியல் தயாரிப்பதில் மாறுபட்ட நிலை உருவானது.
இதனால் 2 ஆண்டுகளாக முதல் தவணை தொகை பயனாளி களுக்கு சென்று சேருவதில் சிறிய தாமதம் ஏற்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் வழிகாட்டுதலின்படி, ஒன் றிய அரசிடம் தொடர்ந்து இது குறித்து பேசப்பட்டு வந்தது. தமிழ் நாடு அரசின் சார்பில் மக்கள் நல் வாழ்வுத்துறையும், ஒன்றிய அரசின் சார்பில் சமூக நலத்துறையும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இந்த இரு துறைகளின் வலை தளத்தில் உள்ள குறைகளை களைவதற்கு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த வாரம் இதற்கு தீர்வு ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழி காட்டுதலின்படி, புதியதாக சீர மைக்கப்பட்டு, 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த தொகை இனி மேல் 3 தவணைகளாக வழங்கப் படவுள்ளது.
கர்ப்பம் தரித்த 4ஆவது மாதம் ரூ.4000-மும், குழந்தை பிறந்தவுடன் ரூ.4000-மும், குழந்தை பிறந்து 4 மாதங்கள் கழித்து ரூ.6000-மும் என்று ஆக மொத்தம்ரூ.14,000 ரொக்கமாகவும், முதல் மற்றும் இரண்டாம் தவணைகளில் ஊட் டச்சத்து பெட்டகமும் இணைத்து தரப்படவுள்ளது.
இதற்கு முன்பு குழந்தை பிறந்து 9 மாதங்கள் கழித்து கடைசி தவணை வழங்கப்பட்டு வந்தது, தற்போது குழந்தை பிறந்து 4ஆவது மாதமே கடைசி தவணை வழங்கப்படவுள்ளது.
மேலும், இதற்கு முன்பு ஒன்றிய அரசு ரூ.3000 வழங்கியவுடன் தான் மாநில அரசு தனது பங் களிப்பை வழங்கப்படும் என்ற நிலை மாறி ஒன்றிய அரசு கால தாமதமாக தனது பங்களிப்பு தொகையை வழங்கினாலும், மாநில அரசு தனது பங்குத் தொகை வழங்கும் வகையில் திருத்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இனிமேல் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் தொகை யில் காலதாமதம் இல்லாத வகை யில் இந்த திட்டம் புதுவடிவம் பெற்றுள்ளது. ஒன்றிய அரசு முதல் பெண்குழந்தைக்கு ரூ.3000-மும், இரண்டாவது பெண் குழந்தைக்கு ரூ.6000-மும் தருகிறார்கள்.
இன்று டாக்டர்.முத்து லெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட் டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 ஒன்றிணைத்து புதுப்பித்து துவக்கி வைக்கப்பட்டு 1,06,766 பயனாளி களுக்கு ரூ.44.05 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடங்கிய 2006 முதல் இதுவரை 1,16,95,973 பயனாளிகளுக்கு ரூ.10,529.57 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாருக்கேனும் விடு பட்டிக்கும் நிலை இருக்குமானால் உடனடியாக அந்தந்த மாவட்ட சுகாதார துணை இயக்குநர் அவர் களிடம் முறையிட்டு சரி செய்துக் கொள்ளலாம், அல்லது 104 என் கின்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்க லாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம்!
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான நிலையில் பயன்பாட்டில் இருக் கின்றது. இந்த ஆட்சி பொறுப் பேற்ற பிறகு 8,12,175 புதிய பயனாளர்கள் சேர்ந்திருக்கின் றனர்.
என்றாலும் புதிது புதியதாக குடும்பங்கள் உருவாகின்றது. எனவே அவர்களுக்கும் இத்திட் டத்தில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் கலைஞர் நூற் றாண்டினை முன்னிட்டு 100 இடங்களில் புதிய காப்பீட்டு திட் டம் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி வருகின்ற 18.11.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ்நாட்டில் 100 இடங்களை தேர்ந்தெடுத்து, அந்த இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படவிருக்கிறது.
இந்த முகாம்களில் காப்பீட்டுத் திட்டத்தில் அட்டைகள் பெறா தவர்கள் கலந்துகொண்டு காப் பீட்டு அட்டை பெற்று பயனடையு மாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் பலர் கடந்த 2006 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் வழங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டையினை வைத்திருக் கிறார்கள்.
அந்த அட்டை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்று ஆராய்ந்து புதிய அட்டையினை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகா தார திட்ட இயக்குநர் ம.கோவிந் தராவ், பெருநகர சென்னை மாநக ராட்சி கூடுதல் ஆணையர் (சுகா தாரம்) சங்கர்லால் குமாவத், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு. தி.சி.செல்வவிநாயகம், மருத் துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.சண்முககனி மற் றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment