கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன. இங்கிலாந்தின் டார்செட் (Dorset) கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் (Poole Harbour) பகுதியில் உள்ள பல தீவுகளில் ஒன்று பிர வுன்சீ தீவு (Brownsea Island). இங்குள்ள இயற்கை வனாந்திரப் பகுதியில் ஒரு டைனோசரின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 140 மில்லியன் ஆண்டுகள் பழைமை உடையது என தெரிய வந்திருக்கிறது. இதனை இகுனாடோன்ஷியன் (igunodontian) எனும் வகையை சேர்ந்த டைனோசரின் கால் அடையாளம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன. அந்த தீவிலுள்ள பிரவுன்சீ கேஸில் (Brownsea Castle) பகுதியில் ஒரு வனத்துறை அதிகாரி சென்று கொண்டிருந்த போது கண்டுபிடித்திருக்கிறார்.
No comments:
Post a Comment