உலகிலேயே மிகவும் ஆபத்தான கடவுச்சொல் "123456"-எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

உலகிலேயே மிகவும் ஆபத்தான கடவுச்சொல் "123456"-எச்சரிக்கை

புதுடில்லி, நவ. 18- உலக அளவில் மிகவும் ஆபத்தான கடவுச் சொல் (பாஸ்வேர்டு) ‘123456' என்று ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. 

இதைப் பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் ஒரு வினாடி நேரத் துக்குள் ஒரு கணக்கில் ஊடுருவ முடியும் என்று கூறப்படுகிறது.

வங்கிகளின் இணையதள சேவை மற்றும் பல்வேறு துறை களின் சேவைகளை பெற நமது பெயரில் தனிக்கணக்கை உரு வாக்கி, அதற்கென கடவுச்சொல் உருவாக்குகிறோம். இணைய குற்ற வாளிகள் ஊடுருவுவதை தடுப்பதற் காக, எளிதில் யூகிக்க முடியாதபடி கடவுச்சொல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

இந்நிலையில், பயனாளிகள் கடவுச்சொற்களை உருவாக்க உதவும் 'நார்டுபாஸ்' என்ற சாப்ட் வேர் நிறுவனம், கடவுச்சொல் குறித்த ஆய்வை நடத்தியது. 35 நாடுகளின் பயனாளிகள் கணக்கு களில் திருட்டு வைரஸ்களை பயன் படுத்தி கடவுச்சொற்களை திருடி எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. 

இருப்பினும், பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை என்று 'நார்டு பாஸ்' நிறுவனம் விளக்கம் அளித் துள்ளது. இணைய பாதுகாப்பு நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது. 

பொதுவான கடவுச்சொல்

அதில், உலகிலேயே மிகவும் பொதுவான கடவுச்சொல் '123456' என்று தெரிய வந்துள்ளது. சுமார் 45 லட்சம் கணக்குகளில், இதை கடவுச்சொல்லாக பயன்படுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்தி, இணைய குற்றவாளிகள் ஒரு வினா டிக்குள் அந்த கணக்குகளுக்குள் ஊடுருவி விடுவார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக, 'அட்மின்' என்ற கடவுச்சொல் 40 லட்சம் கணக்கு களிலும், '12345678' என்ற கடவுச் சொல் 13 லட்சத்து 70 ஆயிரம் கணக்குகளிலும் பயன்படுத்தப்படு கிறது. 

இந்தியா

அதுபோல், இந்திய அளவிலும் '123456' கடவுச்சொல் முதலிடத்தில் உள்ளது. 3 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகளில் பயன்படுத்தப்படு கிறது. 'அட்மின்' கடவுச்சொல், 1 லட்சத்து 20 ஆயிரம் கணக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. உலகி லேயே மிகவும் மோசமான கடவுச்சொல், '123456' தான் என்று 'நார்டுபாஸ்' இணையதளம் வர் ணித்துள்ளது. அது மேலும் கூறியிருப்பதாவது:- பாஸ்வேர்டுகளை எவ்வளவு வலிமையானதாக அமைத்தாலும், திருட்டு வைரஸ் களின் தாக்குதல், கணக்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. 

20 எழுத்துகள் 

ஆகவே, பயனாளிகள், குறைந்த பட்சம் 20 எழுத்துகளில் சிக்கலான கடவுச்சொற்களை உருவாக்க வேண்டும். அவற்றில், பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண்கள், சிறப்பு குறியீடுகள் ஆகியவை கலந் திருக்க வேண்டும். ஒரே கடவுச் சொல்லை ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், ஒரு கணக்கில் ஊடுருவல் நடந்தால், மற்ற கணக்குகளுக்கும் ஆபத்து உண்டாகும். அடிக்கடி கடவுச் சொற்களை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த இணைய தளம் கூறியுள்ளது. 


No comments:

Post a Comment