புதுடில்லி, அக். 12 பெண்களுக்கு உதவு வது போல் நடித்து, பாலியல் வன் கொடுமை செய்த சாமியார் புதுடில்லியில் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லியில் உள்ள காக்ரோலா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் காஷ்யப், (வயது 33). இவர் அதே பகுதியில், 'மாதா மாசனி சவ்கி தர்பார்' என்ற பெயரில் ஆன்மிக சேவை செய்வதாகக் கூறி, 'யூடியூப் சேனல்' ஒன்றையும் நடத்தி வந்தார்.
அதில், பெண்கள் சந்திக்கும் பிரச் சினைகளுக்குத் தீர்வு காண உதவுவதாகக் கூறினார்.
இதை நம்பி அவரிடம் ‘ஆசி' பெற வந்த பெண்களை குருசேவை செய்ய வேண்டும் எனக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என, மிரட் டியுள்ளார்.
சாமியார் வினோத் காஷ்யப் மீது இரு பெண்கள் புகார் அளித்தனர். புகார் மனு குறித்து விசாரணை செய்த காவல்துறை யூடியூப் நடத்திய சாமியாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment