ஊடகவியலாளர் மு.குணசேகரன் தந்தை மறைவு: முதலமைச்சர் இரங்கல் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

ஊடகவியலாளர் மு.குணசேகரன் தந்தை மறைவு: முதலமைச்சர் இரங்கல்

சென்னை, அக். 11- சன் செய்தித் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான மு. குண சேகரன் அவர்களின் தந்தையார் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வருமாறு,

சன் செய்தித் தொலைக்காட்சி முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான மு. குணசேகரன் அவர்களின் தந்தையார் முனியா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன். அவரது மறைவால் வாடும் குணசேகரன், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை யும் தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment