பெரம்பலூர், அக்.3- பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மேனாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ளன. இதில் தந்தை பெரியாரின் சிலையில்கைவிரல் பகுதி சேதப்படுத்தப்பட்டது.
2.10.2023 அன்றுபெரம்பலூர் மாவட்டம் வ. களத்தூர் என்ற ஊரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங் கேற்றிருந்த கழகப் பொறுப்பாளர்களுக்கு தகவல் கிடைத்ததும் கொதிப்படைந்த தோழர்கள் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சி.தங்கராசுவின் மூலமாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
குற்றவாளியை விரைந்து பிடிக்க வேண் டும் என்றும், இல்லையென்றால் ஆர்ப்பாட் டம், போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு தோழர்கள் இரவு 9 மணியளவில் தலைமை கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், கழக சொற்பொழி வாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு, மாவட்டச் செயலாளர்
அ.விஜயேந்திரன், அரிய லூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர்
மு. கோபாலகிருஷ்ணன், பெரம்பலூர் நகர தலைவர் அக்ரி ந. ஆறுமுகம், நகர செயலாளர் அ.ஆதிசிவம், வேப்பூர் ஒன்றிய அமைப் பாளர் அரங்கையா, வேப்பந் தட்டை ஒன்றிய செயலாளர் சின்னசாமி, பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பா.இனி யன், கார்த்திகேயன், அரிய லூர் ஒன்றிய தலைவர் சிவக் கொழுந்து ஒன்றிய செய லாளர் செந்தில், ஒன்றிய அமைப்பாளர் ஆட்டோ தர்மா ஆகியோர் பெரம் பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை பார்வையிட் டனர்.
அப்போது பெரம்பலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் கழக பொறுப்பாளர்களை சந்தித்து சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை சரி செய்யப்பட்டு விட்டதாகவும், குற்றவாளி பிடிபட்டு விட்டதாகவும், இனிமேல் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்தனர்.
No comments:
Post a Comment