பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் செயல்பட "இந்தியா" கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்: சென்னை மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 15, 2023

பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் செயல்பட "இந்தியா" கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்: சென்னை மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா உரை

சென்னை, அக்.15- சென்னை நந்­த­னம் ஒய்.எம்.சி.ஏ. திட­லில் நேற்று மாலை மகளிர் உரிமை மாநாடு கழ­கத் தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில் நடை­பெற்­றது. இம்­மா­நாட்­டில் அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்சி மூத்த தலை­வர் திரு­மதி. சோனி­யாந்தி அவர்­கள் சிறப்­புரை யாற்­று­கை­யில் மக­ளிர் முன்­னேற்­றத்­தில் இந்­தி­யா­விற்கே வழி காட்­டி­யாக தமிழ்­நாடு உள்­ளது என்று பெரு­மி­தத்து டன் அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர் சோனியா காந்தி அவர்­கள் மக­ளிர் உரிமை மாநாட்­டில் சிறப்­புரை ஆற்­று­கை­யில் குறிப்­பிட்­டார்.

அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்­தத் தலை­வர் சோனியா காந்தி ஆற்­றிய உரை வரு­மாறு:

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­களே, அன்­பிற்­கு­ரிய கனி­மொழி அவர்­களே, மேடை­யில் அமர்ந்­தி­ருக்­கக்­கூ­டிய தி.மு.க. மக­ளிர் தலை­வர்­களே,

இந்த அரு­மை­யான நாளில் ஒரு மாபெ­ரும் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளு­டைய நூற்­றாண்டு விழாவை முன்­னிட்டு நடத்­தப்­ப­டு­கின்ற, இந்த மக­ளிர் உரிமை மாநாட்­டிற்கு என்னை அழைத்த முத­ல­மைச்­சர் ஸ்டாலின் அவர்­க­ளுக்கு என் நெஞ்­சார்ந்த நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

தன்­னு­டைய வாழ்க்கை முழு­மை­யும் ஏழை எளிய மக்­க­ளுக்­காக உழைத்­த­வ­ரும், இந்­தி­யத் தாயி­னு­டைய தவப்­பு­தல்­வர்­க­ளில் ஒரு­வ­ரும், நம்­மால் அன்­போடு கலை­ஞர் என்று அழைக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வ­ரு­மான அரு­மைக்­கு­ரி­யத் தலை­வர் கலை­ஞர் அவர்­கள், ஒரு பன்­மு­கத்­தன்மை கொண்ட ஒரு மாபெ­ரும் தலை­வர். ஒரு எழுத்­தா­ள­ராக, ஒரு பத்­தி­ரி­கை­யா­ள­ராக, ஒரு முத­ல­மைச்­ச­ராக, ஒரு நிர்­வா­கி­யாக அவர் ஆற்­றி­யப்­ப­ணி­கள் மகத்­தா­னப் பணி­கள்.

மாநி­லம், மொழி, ஜாதி, மத நம்­பிக்கை இவற்­றிற்­கெல்­லாம் அப்­பாற்­பட்டு, எல்­லோ­ரை­யும் சமத்­து­வ­மாக பார்க்­கக்­கூ­டிய ஒரு அரு­மை­யான தத்­து­வத்­திலே அவர் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தார்.

தன்­னு­டைய வாழ்­நா­ளின்­போது அதி­க­மாக பேசப்­ப­டாத பாலின சமத்­து­வத்தை அவர் சிந்­தித்து அதற்­காக போரா­டு­கின்ற ஒரு போரா­ளி­யாக தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்­டார். இன்று அது ஒரு தேசிய இயக்­க­மாக கொண்­டா­டப்­ப­டு­கின்ற சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

நம்­மு­டைய பெண்­கள் இந்­தி­யா­வி­லேயே மகத்­தான சாதனை செய்­தி­ருக்­கி­றார்­கள். மர­பு­வழி சமூ­கம், ஆணா­திக்க சமூ­கம், கலாச்­சா­ரம் என்­கின்ற தடை­க­ளை­யெல்­லாம் மீறி அவர்­கள் மிக அரு­மை­யான சாத­னை­களை செய்து முடித்து இருக்­கி­றார்­கள்.

பெண்­கள் ஆற்­று­கின்ற பணி மகத்­தா­னது!

இந்த நீண்ட நெடிய போராட்­டத்­தில் ஏற்­றங்­க­ளும் இருந்­தி­ருக்­கின்­றன. இறக்­கங்­க­ளும் இருந்­தி­ருக்­கின்­றன.

ஆனால் இன்று இந்­தி­யப் பெண்­கள் பல்­வேறு துறை­க­ளிலே மிளிர்­கி­றார்­கள். சில­வற்­றைச் சொல்ல வேண்­டும் என்று சொன்­னால், விஞ்­ஞா­னத்­திலே, அறி­விலே, ஆற்­ற­லிலே, கலாச்­சா­ரத்­திலே, விளை­யாட்­டிலே. இவை எல்­லா­வற்­றிற்­கும் மேலாக, நம்­மு­டைய குடும்­பத்­தி­னு­டைய மய்யப் பொ­ரு­ளாக, மக்­க­ளு­டைய தலை­வர்­க­ளாக; அவர்­கள் ஆற்­று­கின்ற பணி மகத்­தா­னது. இருந்­தா­லும் கூட, இந்­தப் போராட்­டம் இன்­னும் நீண்ட தூரம் பய­ணிக்க வேண்­டும். இன்­னும் பல்­வேறு தடை­க­ளைத் தாண்ட வேண்­டும். இருந்­தா­லும், நம்­மு­டைய ஏழை எளிய சகோ­த­ரி­கள் இன்­னும் ஏரா­ள­மான தடை­க­ளைத் தாண்­டித்­தான், இந்த சமத்­து­வத்தை பெறு­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வாகி இருக்­கின்­றது.

காந்தியாரின் தலை­மை­யில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட சாத்­வீ­க­மான வன்­மு­றை­யற்ற சுதந்­தி­ரப் போராட்­டம் மக­ளிர் சமத்­து­வத்தை முன்­னி­லைப்­ப­டுத்­தி­யது. 1928இல் அர­சி­யல் சாசன சட்ட வரைவு மோதி­லால் நேரு அவர்­கள் தலை­மை­யி­லான குழு தயார் செய்து, அந்த அறிக்­கையை சமர்ப்­பித்­தது.

அதற்­குப் பிறகு கராச்­சி­யில் நடை­பெற்ற அகில இந்­திய காங்­கி­ரஸ் மாநாட்­டில் இந்த தேசத்­தின் முதல் பிர­த­மர் ஜவ­கர்­லால் நேரு அவர்­கள், கராச்சி தீர்­மா­னம் என்­கின்ற பெய­ரில் வடி­வ­மைக்­கப்­பட்ட தீர்­மா­னங்­கள், இந்த இரண்டு ஆவ­ணங்­க­ளும் பெண்­க­ளு­டைய உரி­மை­களை கொண்­டா­டு­வ­தி­லும், அவர்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிப்­ப­திலே சமத்­து­வம் வழங்­கப்­பட வேண்­டும் என்­ப­தி­லும், பொரு­ளா­தா­ரத்­தி­லும், அர­சி­ய­லி­லும், செயல்­பா­டு­க­ளிலே அவர்­க­ளுக்கு சரி­யான பங்கு தரப்­பட வேண்­டும் என்­ப­தை­யும் வலி­யு­றுத்­தி­யது.

இந்த இரண்டு ஆவ­ணங்­க­ளும் தந்த அடிப்­ப­டை­யில் தான் நம்­மு­டைய பெண்­கள், ஒரு மிகப்­பெ­ரிய சமூக மாற்­றத்­திற்­கான முன்­னெ­டுப்பை நோக்கி பய­ணிக்க ஆரம்­பித்­தார்­கள்.

இதைத்­தான் எல்­லோ­ருக்­கு­மான வாக்­கு­ரிமை, பாலின சமத்­து­வம், சோச­லிச அறம் சார்ந்த சமூ­கம் இவை­க­ளை­யெல்­லாம், அந்த இரண்டு ஆவ­ணங்­க­ளில் சொல்­லப்­பட்ட அந்த விட­யங்­க­ளில் தான், பாபா சாகிப் டாக்­டர் அம்­பேத்­கர் அவர்­கள் இந்­திய அர­சி­யல் சாசன சட்­டத்­தினை வரை­ய­றுக்­கின்­ற­போது இந்த தத்­து­வங்­களை உள்­வாங்கி அதனை மேலி­டத்­துக்கு செல்­லக்­கூ­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது.

ஒரு ஆண்­ம­கனை நீ படிக்க வைத்­தால் ஒரு தனி நபரை மட்­டும் படிக்க வைக்­கி­றாய். ஆனால் ஒரு பெண்­ணுக்கு கல்வி கொடுத்­தால், ஒரு குடும்­பத்­திற்கே கல்வி கற்­றுத் தரப்­ப­டு­கி­றது. மக­ளிரை அதி­கா­ரப்­ப­டுத்­தி­னால் இந்­தி­யாவை அதி­கா­ரப்­ப­டுத்­து­கி­றோம் என்­கின்ற ஜவ­ஹர்­லால் நேரு அவர்­க­ளு­டைய வார்த்­தை­களை யார் மறக்க முடி­யும்?

மக­ளிர் இட ஒதுக்­கீட்­டிற்­கான சட்­டம், அய்க்­கிய முற்­போக்கு கூட்­டணி அர­சால், 2010 மார்ச் மாதம் 9ஆம் தேதி­யன்று மாநி­லங்­க­ள­வை­யில் நிறை ­வேற்­றப்­பட்­டது. ஆனால் மக்­க­ள­வை­யில் ஒரு கருத்­தொற்­று­மையை உரு­வாக்க முடி­யாத கார­ணத்­தி­னால் அந்­தச் சட்­டத்­தினை நிறை­வேற்ற முடி­யா­மல் போய்­விட்­டது.

இப்­போது இந்­தச் சட்­டம் நிறை­வேறி இருக்­கி­றது என்று சொன்­னால் கூட, இந்­தச் சட்­டத்­திற்­காக நாம் எடுத்­துக்­கொண்ட முயற்­சி­க­ளும், நாம் கொடுத்த அழுத்­தங்­க­ளும் மிக அதி­கம்.

இங்கே பல்­வேறு உறுப்­பி­னர்­கள் பேசி­ய­து­போல இந்­தச் சட்­டம் என்­றைக்கு நடை­மு­றைக்கு வரும்; என்று அமல்­ப­டுத்­தப்­ப­டும்; என்று ஒரு தெளிவே இல்­லாத ஒரு சூழ்­நி­லை­யிலே இந்த ஆண்டா, அடுத்த ஆண்டா, இன்­னும் சில ஆண்­டு­கள் கழித்தா? என்­கின்ற ஒரு நிரந்­த­ர­மற்ற தன்­மை­யிலே இந்­தச் சட்­டத்தை உரு­வாக்கி இருப்­பது, நாளை வரு­கின்ற இந்­தியா கூட்­டணி வந்­து­தான் இந்­தச் சட்­டத்தை நிறை­வேற்­றித் தர வேண்­டிய சூழ்­நி­லை உரு­வா­கும் என்ற எண்­ணத்தை நமக்­குத் தரு­கின்­றது.

அண்­ணா-க­லை­ஞர் முன்­னெ­டுப்­பு­கள்!

அறி­ஞர் அண்ணா அவர்­க­ளு­டைய தலை­மை­யிலே அமைந்த அர­சும், அத­னைத் தொடர்ந்து கலை­ஞர் தலை­மை­யிலே தொடர்ந்த அர­சும் எடுத்­துக் கொடுத்த முன்­னெ­டுப்­பு­ க­ளும், செயல்­ப­டுத்­திய திட்­டங்­க­ளும், பெண்­க­ளு­டைய வாழ்க்­கை­யில் பல புரட்­சி­க­ளை­யும், பல முன்­னேற்­றங்­க ­ளை­யும் தந்­தி­ருக்­கன்­றது.

அதன் அடிப்­ப­டை­யில் தான் இன்று தமிழ்­நாட்டை இந்­தி­யாவே புகழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற மக­ளிர் உரி­மை­க­ளை­யும், மக­ளி­ரு­டைய சமத்­து­வத்­தை­யும் கொண்­டா­டக்­கூ­டிய ஒரு ஒளி­வி­ளக்­கா­கத் திகழ்­கின்­றது என்று சொன்­னால், அது மிகை­யா­காது.

வர­லாற்று புகழ்­மிக்க அய்ந்­து­முறை முத­ல­மைச்­ச­ராக இருந்த கலை­ஞர் அவர்­க­ளு­டைய ஆட்சி காலத்­தில் தான், 1973ஆம் ஆண்­டில் காவல்­து­றை­யில் பெண்­க­ளு­டைய பங்கை அவர்­கள் உறுதி செய்­தார். இன்று தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற காவல்­து­றை­யிலே நான்­கில் ஒரு பங்கு பெண்­க­ளாக இருப்­பது எவ்­வ­ளவு பெரு­மைப்­ப­டக்­கூ­டிய ஒரு செயல்.

இன்று இருக்­கின்ற காவல்­து­றை­யி­ன­ரில் நான்­கில் ஒரு பங்­கைக் சார்ந்­த­வர்­கள் பெண்­கள் என்­கிற சூழ்­நிலை இருக்­கின்­றது.

கலை­ஞர் அவர்­கள் செய்த முக்­கி­ய­மான மற்­றொரு சீர்த்­தி­ருத்­தம் என்­ன­வென்று சொன்­னால், அரசு பணி­க­ளிலே பெண்­க­ளுக்­கான இட ஒதுக்­கீட்­டைச் செய்­தது. அதன் விளை­வாக அர­சுப் பணி­க­ளிலே 30 விழுக்­காட்­டைச் சார்ந்­த­வர்­கள் பெண்­க­ளாக இருந்­தார்­கள்.

40 சத­வி­கி­த­மாக உயர்த்­திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று நம்­மு­டைய முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில் செயல்­ப­டு­கின்ற இந்த அரசு அந்த 30 விழுக்­காட்டை 40 விழுக்­கா­டாக உயர்த்தி பெண்­களைப் பெரு­மைப்­ப­டுத்தி இருக்­கின்­றது.

பெண்­க­ளு­டைய நல்­வாழ்­வுக்­காக தமிழ்­நாடு அர­சால் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ள பல்­வேறு திட்­டங்­கள், சத்­து­ண­வுத் திட்­டங்­கள், பெண்­க­ ளு­டைய நல்­வாழ்­வுக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்ற மருத்­து­வத் துறை­யில் செயல்­ப­டுத்­தக்­கூ­டிய திட்­டங்­கள், தாய்­மார்­க­ளுக்­கா­க­வும், பால் குடிக்­கும் சேய்­க­ளுக்­கா­க­வும் அர­சாங்­கம் நிறை­வேற்­றப்­ப­டு­கின்ற பல்­வேறு திட்­டங்­கள் மிகச்­சி­றப்­பாக செயல்­ப­டு­கின்ற கார­ணத்­தி­னால் தான் இன்று தமிழ்­நாட்­டில் தாய்-சேய் இறப்பு விகி­தம் இந்­தி­யா­வி­லேயே மிகக்­கு­றைந்த நிலை­யிலே இருப்­ப­தற்கு கார­ண­மாக அது­தான் அமைந்­துள்­ளது.

கடந்த 9 ஆண்டு காலங்­க­ளாக மோடி அர­சி­னு­டைய நட­வ­டிக்­கை­கள் - நாம் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்ற திட்­டங்­கள், நாம் பெற்­றுத்­தந்த உரி­மை­கள், கடந்த 70 ஆண்­டு­க­ளிலே நாம் செய்த நல்ல முயற்­சி­க­ளை ­யெல்­லாம், சீர­ழிக்­கின்ற வகை­யில் செயல்­ப­டு­வது நமக்கு ஏற்­பட்டு இருக்­கின்ற மிகப்­பெ­ரிய கெட்டவாய்ப்பு.

பெண்­களை ஒரு அடை­யா­ளச் சின்­ன­மாக மாற்றி, பழை­மை­யி­லும், மர­பி­லும் ஏற்­க­னவே பின்­பற்றி வரு­கின்ற பாரம்­ப­ரிய சூழ்­நி­லை­க­ளில் மட்­டும் தான் பெண்­கள் இருக்க வேண்­டும் என்று எண்­ணு­கி­றது இந்த அரசு. அவர்­க­ளுக்­காக ஒரு புதிய சுதந்­தி ­ரத்­தை­யும், உரி­மை­க­ளை­யும் அளிக்க அவர்­கள் தயா­ராக இல்லை.

இதைப்­போ­லத்­தான் எல்­லாத்­து­றை­க­ளி­லும் எல்லா சுதந்­தி­ரத்­திற்­கும், சமத்­து­வத்­திற்­கும் அறம் சார்ந்த சமு­தா­யத்­திற்­கு­மாக நாம் பெற்ற அனைத்து உரி­மை­க­ளை­யும் கடந்த 9 ஆண்டு கால­மாக சீர­ழிக்­கப்­பட்டு வரு­வதை நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன்.

‘இந்­தியா’ கூட்­டணி பெண்­களை 

மேம்­ப­டுத்­தும்!

நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன். நாம் ஏற்­பாடு செய்து இருக்­கின்ற “இந்­தியா” கூட்­டணி என்­கின்ற இந்த அற்­பு­த­மான ஏற்­பாடு - இதைப்­போன்ற சமச்­சீ­ரற்ற தன்­மை­களை எல்­லாம் விலக்கி, பெண்­க­ளுக்கு உண்­மை­யா­கவே அவர்­க­ளுக்கு ஒரு சமத்­துவ உலகை உரு­வாக்­கிக்­கொ­டுப்­ப­தற்­கான மிக அவ­ச­ர­மான நட­வ­டிக்­கை­களை நிச்­ச­யம் மேற்­கொள்­ளும் என்று நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன்.

நான் உறு­தி­யா­கச் சொல்­லு­கி­றேன். இந்­தியா கூட்­டணி என்­பது நிச்­ச­ய­மாக இந்த மக­ளிர் இட ஒதுக்­கீட்­டுக்­கான சட்­டத்தை நிறை­வேற்­றியே தீரும். அதை நிறை­வேற்றி ஒரு நல்ல சூழ்­நி­லையை நாம் ஏற்­ப­டுத்­தியே தீரு­வோம்.

இங்கே குழு­மி­யி­ருக்­கின்ற நாம் அதற்­கான உறு­தியை எடுத்து அதனை நோக்கி செயல்­பட வேண்­டும் என்று நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.

இது இந்­தியா கூட்­ட­ணி­யைச் சேர்ந்த கட்­சி­கள் நிச்­ச­ய­மாக செய்­யும். நாம் அனை­வ­ரும் சேர்ந்து போரா­டு­வோம். நாம் அனை­வ­ரும் சேர்ந்து நிச்­ச­ய­மாக இத­னைச் சாதிப்­போம்!

நன்­றி­யோடு உழைப்­போம்! வெற்றி நமதே!

இவ்­வாறு சோனியா காந்தி அவர்­கள் உரை­யாற்­றி­னார்.

No comments:

Post a Comment