ஒருவர் எவ்வளவுதான் சட்டத்தை, சாஸ்திரத்தை வெறுத்தாலும் சட்டசபைக்குப் போனவுடன், சாஸ்திரத்திற்குக் கட்டுப்படுகிறேன் என்று சொல்லி விட்டுத்தான் உட்கார முடிகிறது. 'ஜாதி மதச் சம்பிரதாயங்கள் எல் லாம் தனி மனிதன் உரிமைகள்; அவற்றைக் காப்பாற்றுவதுதான் சுதந்தரம்; இந்தச் சுதந் தரத்தின் (சட்டத்தின்) மூலமாக மக்களுக்கு இவற்றைக் காப்பாற்றுகிறோம்' என்று உறுதி கூறுகிறார்கள். ஆகையால், நாம்தாம் ஏமாந்தவர்கள்; இல்லாவிட்டால் பித்தலாட்டம் பேசகிறவர்கள். எப்படி ஜாதியை ஒழிக்கிறவர்கள் என்பவர்களுக்குக் கடவுள் இல்லையோ - சாஸ்திரம், மதம் இல்லையோ - அதே மாதிரிதான். ஜாதியை ஒழிக்கிறேன் என்கிறவர்களுக்கு அரசாங்கம் இல்லை.
(நூல்: 'ஜாதி ஒழிப்பு')
No comments:
Post a Comment