ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது வலிமையான நடவடிக்கை ராகுல் காந்தி பேட்டி - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது வலிமையான நடவடிக்கை ராகுல் காந்தி பேட்டி

2

புதுடில்லி, அக்.10 நாடு முழுவதும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அக்கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் முடிந்தவுடன், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- 

நாடு தழுவிய ஜாதிவாரிக் கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என்று காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க முடிவு. மிகவும் முற் போக்குத்தனமானது. ஏழைகள் விடு தலைக்கு இது வலிமையான நட வடிக்கை. பெரும்பாலான 'இந்தியா' கூட்டணி கட்சிகள், ஜாதிவாரிக் கணக் கெடுப்பை ஆதரிக்கும் என்று கருது கிறேன். எந்த கட்சிக்காவது மாறுபட்ட கருத்து இருந்தால், காங்கிரஸ் வளைந்து கொடுக்கும். நாங்கள் பாசிஸ்டுகள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment