சென்னை, அக். 9- இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் திடீர் தாக் குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ் ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ் ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடி யாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும், போர் சூழ்நிலை ஏற் பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் பாது காப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், தனியாக இருப்பதை தவிர்த்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும் எனவும் அவசர தேவைக்கு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அங்குள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள தமிழர்களை மீட்க தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது. இஸ்ரே லில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 நபர்கள் அயலகத் தமிழர் நலவாரி யத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ள தாகவும், அவர்கள் 15 பேரும் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் உள்ளிட்ட பல் வேறு நகரங்களில் பணி செய்து வருவ தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 நபர்களும் தற்போது பாதுகாப் பாக இருப்பதாகவும், போர் தீவிர மடைந்தால் தங்களை மீட்க நடவ டிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment