அப்துல்கலாம் பிறந்த நாள் இன்று! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 15, 2023

அப்துல்கலாம் பிறந்த நாள் இன்று!

டாக்டர் அப்துல்கலாம் சிலையும் - சீலமும் என்றும் பாராட்டத்தக்கது!தமிழர் தலைவர் அறிக்கை

டாக்டர் அப்துல்கலாம் சிலையும் - சீலமும் என்றும் பாராட்டத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மதிப்புறு மேனாள் குடியரசுத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களது 92 ஆவது பிறந்த நாள் இன்று (15.10.2023).

மண்ணை மணந்தவர்; மக்களை நேசித்தவர் அவர்! எளிமையும், தன்னடக்கமும் அவரது அணிகலன்களாக இருந்து - கட்சி, மதம், ஜாதி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து மக்களும் அவரை நேசித்தனர்!

தஞ்சை பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திற்குத் தவறாமல் வருகை தந்து, நம்மிடம் அளவற்ற பாசத்தைக் கொட்டியவர் அப்துல்கலாம் என்ற மக்கள் குடியரசுத் தலைவர் (People's President). நம்  முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் அவரது சிலையைத் திறந்து வைப்பது பாராட்டி வரவேற்கத்தக்கது!

‘‘கிராமங்களை உயர்த்தவேண்டும்'' என்ற அவரது கனவுத் திட்டமான PURA (Providing Urban Amenities to Rural Areas) என்பது 1940-களிலேயே தந்தை பெரியார்தம் கருத்தாக்கமாக இருந்ததை அறிந்து, பாராட்டி தஞ்சைக்கு அருகில் 69 கிராமங்களைத் ‘தத்தெடுத்து' நாம் நடைமுறைப்படுத்திய ‘புரா' திட்டத்திற்குப் பெரியார் புரா (Periyar PURA)  என்று பெயர் கொடுத்து, பெருமைப்படுத்திய பெம்மான் அவர்.

அவரது பிறந்த நாள் என்றும் வரலாற்றில் ஒரு சிறந்த நாள்; பாடம் கற்கும் புதுமை நாள்!

அவர் புகழ் வாழ்க!

கி.வீரமணி 
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.10.2023

No comments:

Post a Comment