ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

10.10.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்

* சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய அய்ந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும், இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* காவிரி விவகாரம் தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கருநாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தல்

* ‘ஓபிசி பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆட்சிக்கு வந்தவுடன் நாடு தழுவிய ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு’:. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* பத்திரிகையாளர்கள் சந்திப்பில், உங்களில் எத்தனை பேர் தலித், ஓபிசி; கைகளை உயர்த்துங்கள், ராகுல் வேண்டுகோள். ஒருவரும் இல்லாத நிலையில் இதற்குத்தான் ஜாதி வாரி கணக்கெடுப்பை கோருகிறோம் என ராகுல் பேச்சு.

தி டெலிகிராப்

* இந்த வழக்கு போலியானது, சீனாவில் இருந்து ஒரு பைசா கூட வரவில்லை. போலியாக வழக்கை அரசு பதிவிட்டுள்ளதாக நியூஸ் கிளிக் முதலாளி பிரபீர் புர்காயஸ்தா டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment