தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டு முறை என்ற பெயரில் நாட்டைப் பின்னோக்கித் தள்ளும் மக்கள் விரோத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசும் அந்தத் தப்புக்குத் தாளம் போடுகிறது.
10 லட்சம் மக்களுக்கு 100 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை என்பது தான் அந்த மனித நலப் பாதுகாப்புக்கு விரோதமான அறிவிக்கையாகும்.
அந்த வகையில் பார்த்தால் 7.64 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 7,640 மாணவர்களைத்தான் சேர்க்க முடியும்.
ஆனால், தமிழ்நாட்டிலோ 11,600 மாணவர்களைச் சேர்க்கும் அளவுக்கு மருத்துவக் கல்லூரிகள் வளர்ந்து உள்ளன. 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாட்டில் உள்ளன.
ஒரு மாநிலம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்கு அளவு கோல் - கல்வி வளர்ச்சியும், மருத்துவ வளர்ச்சியுமேயாகும்.
தேசிய மருத்துவ ஆணையமும், ஒன்றிய பிஜேபி அரசும் மக்கள் நலக் கண்ணோட்டத்தில் ஒரு பிரச்சினையைப் பார்க்காமல் கல்விக் கண்ணைக் குத்துவதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.
மாநில அரசின் திட்டங்களில் எதில் தான் தலையிடுவது என்ப தற்கு அளவேயில்லாமல் மூர்க்கத்தனமாகவும் அரசியல் கண்ணோட் டத்திலும் மூக்கை நுழைப்பது - கேவலமான அணுகுமுறையாகும்.
பிஜேபி ஆளும் மாநிலங்களில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்பதையும், பிஜேபி அல்லாத கட்சிகள் மாநிலங்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பிஜேபி ஆட்சியின் அவலங்கள் எத்தகையன என்பது விளங்காமற் போகாது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டு முறை என்பதே கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமாகும்.
இது வழி காட்டும் முறையல்ல - பழியை நோக்கி இழுத்துச் செல்லும் கேடு கெட்ட ஒன்றாகும்.
பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கரோனா காலத்தில் நடந்தது என்ன? கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமையால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 72 - சாமியார் ஆளும் அதே மாநிலத்தில் வாரணாசியில் அதே காரணத்துக்காக 40க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் மரணக் குழியில் தள்ளப்பட்டன.
பிஜேபி கூட்டணி ஆளும் மகாராட்டிரத்தில் கடந்த வாரம் மருந்துகள் பற்றாக்குறையால் 31 குழந்தைகள் மரணித்தன.
கேட்டால் சொன்னாலும் சொல்லுவார்கள் - அவர்களின் ஹிந்துத் துவா பார்வைப்படி 'அவையெல்லாம் "அவாள் அவாள் தலையெ ழுத்து" என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இப்பொழுது ஒரு செய்தி வந்துள்ளது. ஸ்பிரிச்சுவல் கல்லூரியை ஏற்படுத்தப் போகிறார் களாம். 'மந்திரத்தால் மாங்காய் விழா வைக்கப் போகிறார்களாம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு ஆணி வேரையும் வீழ்த்துவதற்கு அரிவாளைத் தூக்கிக் கொண்டு அலைகிறது. ஆர்.எஸ்.எஸ். தொப்புள் கொடியைக் கொண்ட பிஜேபி ஆட்சி!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மை, சோசலிசம் என்பதற்குள் கத்தி தீட்டி விட்டார்கள்.
விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்தத்தை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்கிற (51-கிலீ) சட்டத்தையும் சாவுக் குழியில் தள்ளுவது தான் இந்த 'ஸ்பிரிச்சுவல்' கல்வி என்பது.
சாமியார்களுக்கே என்று ஆர்.எஸ்.எஸில் ஒரு பிரிவை - விசுவ ஹிந்து பரிஷத் என்ற பெயரில் வைத்துக் கொண்டு இருக்கவில்லையா? 450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லிம்களின் பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் இடித்துத் தரை மட்டமாக்கியதில் இந்த விஸ்வ ஹிந்து பரிஷத்துக்குத் தானே முதலிடம் - தலைமையாகும்.
மாநாடுகள் நடத்தி வி.எச்.பி.காரர்களுக்குத் திரிசூலம் வழங்குப வர்களும் இவர்கள் தானே!
ஒரு சூலம் இஸ்லாமியர்களையும், ஒரு சூலம் கிறித்த வர்களையும், மூன்றாவது சூலம் மதச் சார்பின்மையைப் பேசுப வர்களையும் குத்திக் குடலைக் கிழிக்கும் என்பது தானே அவர்களின் தாரகம்.
முண்டமான விநாயகனுக்கு யானை தலையை வெட்டிப் பொருத்தினான் சிவன் என்று சொல்லி, அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று சொன்னவர் தானே 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தின் 56 அங்குல மார்பளவைக் கொண்ட பிரதமர்.
அதனால்தான் மருத்துவக் கல்லூரிகளை மூடி ஸ்பிரிச்சுவல் கல்லூரிகளைத் திறக்கத் திட்டமிடுகிறார்கள் போலும்!
இதில் இன்னொன்றும் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது கணக் கில்லாமல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தால் மருத்துவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவிப்பார்களாம்! என்னே கருணை உள்ளம்!
இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால் ஆண்டு ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகளிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் படித்து வெளி வருகிறார்களே, அவர் களுக்கெல்லாம் வேலை உத்தரவாதம் உண்டா?
வேலை வாய்ப்பு இல்லை என்று கூறி பொறியியல் கல்லூரி களையும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் இழுத்து மூடி விடுவார்களோ!
பிரதமர் என்ன படித்தார் என்பதே ஒரு நாட்டில் சர்ச்சையாகி இருப்பது - இந்தப் பாரத புண்ணிய நாட்டில்தானே!
ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று அறிவித்த பிரதமர் மோடி, ஆண்டு ஒன்றுக்கு பல்லாயிரம் பேர்கள் பட்டம் பெற்று வெளி வருவோர்க்கு வேலை வாய்ப்புக் கொடுத்திருக்கலாமே - கொடுத்தாரா?
கேட்டால் சற்றும் பொறுப்பு இல்லாமல் அந்த வாக்குறுதி எல்லாம் ஜும்லா (போகிற போக்கில் சொல்லும் ஏமாற்று வித்தை) என்று சொல்லுகிறார்கள் என்றால் 'இது ஒரு நாடு தானா? இப்படி சொல்லுவோர்களின் ஆட்சியில் தான் நாம் குடி மக்களாக வாழ்கிறோமா?' என்று நமக்கு நாமே கேள்வி கேட்டு தலைகுனிய வேண்டி இருக்கிறது.
தமிழ்நாடு தழுவிய அளவில் நேற்று (9.10.2023) நடந்த திராவிடர் கழகப் போராட்டம் என்பது ஆட்சியின் அடி வேரை நோக்கிய மக்களின் வேங்கைப் பாய்ச்சல் ஆகும். திராவிடர் கழகத் தலைவர் நேற்றைய போராட்டத் துக்கு தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டதுபோல நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில்
பிஜேபி.க்குப் பெரும் தோல்வியைக் கொடுப்பதுதான் இந்த அவ லங்களுக்கெல்லாம் ஒரே தீர்வாகும்! வெகு மக்கள் விழிப்பார்களாக!
No comments:
Post a Comment