கவுரஹல்லி, அக்.12- கருநாடக மாநிலம் பெங்களூரு மேற்கு பகுதியான கவுரஹல்லியில் ஊன்றுகோல் சமூக சேவை அமைப்பின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக முழு நாள் நிகழ்வாக நடைபெற்றது.
பெங்களூரு மேற்கு கவுரஹல்லியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!
கவுரஹல்லியில் 2014ஆம் ஆண்டுக ளுக்கு முன்னர் துவங்கிய ஊன்றுகோல் சமூக சேவை அமைப்பின் சார்பில் 17.9.2023 அன்று காலை 11.00 மணிக்கு தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, அந்நிறுவ னத்தின் நிறுவனத் தலைவர் ஜார்ஜ் தலைமையில் விழா தொடங்கி நடை பெற்றது.
ஊன்றுகோல் சமூக சேவை அமைப்பு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் துவங்கி 2014ஆம் ஆண்டு அரசு பதிவுத் துறையில் பதிவு செய்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
இவ்வமைப்பின் சார்பில் 60 மகளிர் முதியோர்களும், 50 ஆண் முதியோர் களும், 50 சிறார் (ஆதரவற்றோர்களும் தங்கி வருகின்றனர். சுமார் 1500 சதுர அடிக் கட்டடத்தில் இயங்கி வரு கின்றது.
சிறார்களை வேன் மூலம் அரசு பள்ளிக் கூடத்திற்கு அழைத்துச் சென்று கல்வி கற்கவும், பின்னர் மய்யத் தில் தங்க வைத்து உணவு, உடை, கல்வி சாதனங்கள் வழங்கி பாதுகாத்தும் வருகின்றனர்.
ஆண், பெண் முதியோர்களை தங்க வைத்து நல்ல வகையில் பராமரித்து வருகின்றனர். தந்தை பெரியார் கைத் தடியுடன் நடந்துவரும் ஒளிப் படம் கட்டடத்தின் முகப்பில் வைக்கப்பட் டுள்ளது. அன்னை மணியம்மையார், ஜோதிபாபூலே, நேதாஜி, பகவத் சிங், புத்தர் படங்களும் வைக்கப்பட்டுள்ளன.
தந்தை பெரியார் அவர்களின் மார் பளவு சிலை விழா மேடையில் அலங்காரம் செய்து வைக்கப்பட் டிருந்தது.
மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி பெரியார் பற்றியே அமைந்திருந்தது.
பெரும்புலவர் கி.சு.இளங்கோவன் சிறப்புரை நிகழ்த்தினார். வழக்குரைஞர் பிரிவு கழக செயலாளர் ஜெ.அருண், திராவிடர் கழக செயலாளர் இரா.முல்லைக்கோ கலந்துகொண்டு சிறப் பித்தனர்.
ஏராளமான உள்ளூர் மகளிர் திரளாக ஊர்வலமாக வருகை தந்து சிறப்பித்தனர். முற்றிலும் கன்னட மொழி பேசம் கிராமப்புறத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு விழா நடந்த நிகழ்வு மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது.
-----
பெங்களூரு மாநகரில் முப்பெரும் விழா!
இனமான எழுச்சியூட்டிய புரட்சி யாளர்கள் அறிவாசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, நூற் றாண்டு விழா காணும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள திராவிடர் அகம், பெரியார் மய்யம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அரங்கில் 17.9.2023 அன்று காலை 10:00 மணி அளவில் எழுச்சியுடன் முப்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் தலைமை யேற்று முப்பெரும் தலைவர்கள் குறித்து விளக்கி உரை நிகழ்த்திய பின்னர் செய லாளர் இரா.முல்லைக்கோ அனைவ ரையும் வரவேற்று இணைப்புரை வழங் கினார்.
பொருளாளர் கு.செயக்கிருட்டி ணன் கழகக் கொடியை பலத்த கர ஒலிக்கிடையே ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். 104 அகவை நிறைந்த நாடகச் செம்மல் வீ.மு.துரை, மாநில துணைத் தலைவர் பு.ர.கஜபதி முன் னிலை ஏற்று உரை நிகழ்த்தினர்.
கஜபதி அவர்கள் 88 அகவை நிறைந்து 65ஆம் ஆண்டு மண விழா நிகழ்வு செப்டம்பர் திங்களில் நடை பெற்ற மகிழ்வினையொட்டி இருவருக் கும் பயனாடை தலைவரால் அணிவித்து சிறப்பித்த பின் உரை நிகழ்த்தினார்.
கருநாடக மாநில அம்பேத்கர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சாக்கேஸ்சாமி, தந்தை பெரியாரின் பிறந்த நாள் கேக்கினை வெட்டினார். பேராசிரியரின் மூத்த மகன் பிரசாந்த் பிறந்த நாள் மகிழ்வாகக் கொண்டு வந்த கேக்கினை கர ஒலிக்கு மத்தியில் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இருவருக்கும் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
அடுத்த நிகழ்வாக தந்தை பெரியார் படத்தினை வழக்குரைஞர் பிரிவு தலைவர் சே.குணசேகரன் திறந்து வைத்து பெரியார் என்னும் ஈட்டி என்ற தலைப்பில் கவிதையை கூறி பெரி யாரைப் பற்றி உரை நிகழ்த்தினார்.
அறிஞர் அண்ணாவின் படத்தினை கழக வழக்குரைஞர் பிரிவு செயலாளர் ஜெ.அருண் திறந்து வைத்து உரை யாற்றினார். முத்தமிழறிஞர் கலைஞரின் படத்தினை கழக வழக்குரைஞர் பிரிவு அமைப்பாளர் பெஞ்சமின் பிராங் கிளின் திறந்து வைத்து உரை நிகழ்த் தினார்.
பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசா ராம், வடக்கு மண்டலத் தலைவர்
இள.பழனிவேல், வடக்கு மண்டல செயலாளர் சி.வரதராசன், எம்.ஜியா, தலைவர் கோ.சண்முகம், வழக்குரைஞர் தியாகராசன், வழக்குரைஞர் விசயராஜ், பொறியாளர் கண்ணபிரான் மற்றும் பலர் உரை நிகழ்த்தினர். நிறைவாக தென் மண்டல செயலாளரும், முது பெரும் புலவருமான கி.சு.இளங்கோவன் சிறப்புரையாற்றினார். கு.ஆனந்தன் நன்றியுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
மகளிர் அணி பொறுப்பாளர் கலைச் செல்வி மற்றும் பன்னார் காட்டாவிலிருந்து அறுவர் இராஜா தலைமையில் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment