தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்திக்குத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்திக்குத்து

அய்தராபாத், அக் 31 தெலங்கானா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர்  பிர பாகர ரெட்டியை கத்தியால் குத்திய தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்தி பெட் மாவட்டத்தில் உள்ள டுப்பக்கா சட்டமன்ற தொகுதி வேட்பாளராக உள்ள பிரபாகர ரெட்டி, சூரம்பள்ளி கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண் டார். அப்போது அடையாளம் தெரி யாத நபர் ஒருவர் பிரபாகர் ரெட்டியை வயிற்றில் கத்தியால் குத்தினார். இதனையடுத்து பிரபாகர் ரெட்டி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய நபரை பிடித்த அந்த கிராம மக்கள் மற்றும் கட்சியினர் அவரை சரமாரியாக தாக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த பிரபாகர் ரெட்டி தற்போது மேடக் நாடாளு மன்ற தொகுதி உறுப்பினராக உள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


முக்கால் வாசி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு அமெரிக்க நிறுவனம் 

வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

புதுடில்லி, அக். 31 81.5 கோடி இந்தியர்களின் ஆதார் எண், பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் டார்க் வெப் என்ப்படும் தரவு திருட்டு வலைதளத்தில் கிடைப்பதாக வந்த தகவலையடுத்து அந்நிறுவனம் மேற் கொண்ட ஆய்வில் இதுதெரியவந்துள் ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் அய்சிஎம்ஆர் சர்வர்களில் இருந்து திருடப்பட்டுள்ள இந்த தரவுகளில் அவர்களின் நோய் மற்றும் அவர் களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட விவரங்கள் உள்ளது. இது இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தரவு திருட்டு என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தரவு திருட்டு குறித்து சிபிஅய் விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment