திருத்துறைப்பூண்டி,அக்.10- திருத்துறைப் பூண்டியில் தந்தை பெரியார் 145ஆவது ஆண்டு பிறந்த நாள் பெரியார் பட ஊர்வலம் சமூகநீதி பாதுகாப்பு பேரணி 03.10.2023 அன்று நடைபெற்றது. பேரணியை நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை துவக்கி வைத்தார். நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர் பா.எழிலரசன் உரையாற்றினார். மாவட்டத் தலைவர் வீ.மோகன் பேரணிக்கு தலைமையேற்று உரையாற்றினார்.
ஊர்வலம் அம்பேத்கர் சிலையிலிருந்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை வந்து அடைந்தது.
மாவட்ட இளைஞரணி செய லாளர் மு.மதன் தலைமையில் அனைவரையும் வரவேற்று மாவட்ட இளைஞரணி துணை தலைவர் அஜெ.உமாநாத் உரை யாற்றினார். மாணவர் கழகம், இளைஞரணித் தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார்கள்.
நிகழ்வில் டிஒய்எஃப்அய் மாவட்ட செயலாளர் ஏ.கே.வேல வன், எஸ்எஃப்அய் மாவட்ட செயலாளர் பா.ஆனந்த், எஸ் எஃப்அய் மாவட்ட தலைவர் சுர்ஜித், எஸ்எஃப்அய் ஒன்றிய செயலாளர் பா.அனுஸ்மித்ரன், திமுக நகர இளைஞரணி அமைப் பாளர் கோ.வசந்தன், திமுக ஒன் றிய இளைஞரணி அமைப்பாளர் ரா.வெங்கடேஷ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் குணா, மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் மு.ஆசாத், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட அமைப் பாளர் சந்தோஷ், அம்பேத்கர் மக் கள் இயக்க அமைப்பாளர் விக் னேஷ், மே 17 இயக்க தோழர்
சி.வீரக்குமார், தமமுக ஒன்றிய செயலாளர் முகமது பாசில், திரு வாரூர் நகர மன்ற உறுப்பினர் வரத ராஜன், மாநில விவசாய தொழிளா ரணி செயலாளர் க.வீரையன், திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்த ராஜ், தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரைக்கு பின் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் தேவ.நர்மதா, சட்டமன்ற உறுப் பினர் க.மாரிமுத்து ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கே.அழகேசன் நன்றி கூறினார். நிகழ்வில் மன்னை மாவட்ட இணை செயலாளர் வீ.புட்பநாதன், மாவட்ட மகளி ரணி துணை தலைவர் சி.கலை வாணி, திருவாரூர் நகர தலைவர் கா.சிவராமன், நன்னிலம் ஒன்றிய செயலாளர் சு.ஆறுமுகம், திருத் துறைப் பூண்டி ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், ஒன்றிய பகுத் தறிவாளர் கழக தலைவர் அ.செல்வம், செயலாளர் அ.கோபி, ஆசிரியர் கு.நேரு, தலைஞாயிறு ஒன்றிய தலைவர் அய்.பாஸ்கர், மனக்குடி சொக்கலிங்கம், ஓவியர் ராஜ.மணிகண்டன், தங்க.கிருஷ்ணன், வேதை ஒன்றிய துணை செயலாளர் மு.அய்யப்பன், நகர தலைவர் சு.சித் தார்த்தன், நகரச் செயலாளர் ப.நாக ராஜன், நகர துணை செயலாளர் ப.சம்பத் குமார் காஞ்சிபுரம் நா.சுரேஷ் முரளி, மேட்டுப்பாளையம் அரிதாசன், இந்த சமூகநீதி பேரணியில் 10க்கும் மேற்பட்ட சமூகநீதி அமைப்புகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment