தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - சமூகநீதி நாள் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - சமூகநீதி நாள் பொதுக்கூட்டம்

கல்பாக்கம், அக். 10-  செங்கல் பட்டு மாவட்டம் கல்பாக் கம் நகரியத்தில் புதுப்பட் டினம் காயிதேமில்லத் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா 29.9.2023 அன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மிகவும் எழுச்சியுடன், மதச்சார் பற்ற கூட்டணி கட்சிக ளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது

மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் உள் ளிட்ட பல்வேறு கட்சி கள், அமைப்புகளின் பொறுப்பாளர்களது கருத்துரைக்குப் பின் கழ கப் பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார்.

கழகத் தோழர்கள் பொதுக்குழு உறுப்பினர் கல்பாக்கம் பக்தவச்சலம், மாவட்டத் துணைத் தலைவர் நெல்லை  சாலமன், நகரத் தலைவர் மா. விஜயகுமார், நகர செயலாளர் விடுதலை சாமு, கோவிந்தசாமி, பேரானந்தம், குகநாதன், ராமு, டெய்லர் சேகர், குசன், அஜித்குமார். சிபி எம், விடுதலைச் சிறுததை கள் கட்சி, தமிழக வாழ் வுரிமைக் கட்சி, காங்கி ரஸ், திமுக, மனிதநேய மக்கள் கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற் றும் அம்பேத்கர் இரவு பாடசாலை மாணவர்கள் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.  பொதுமக்கள் வியாபாரிகள் அனைத் துக் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

No comments:

Post a Comment