* 10 லட்சம் பேருக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்!
* அப்படி என்றால் இந்த இலக்கைத் தாண்டிய தமிழ்நாட்டின் கல்லூரிகளை மூடப் போகிறார்களா?
* மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா?
* நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிஜேபியைத் தோற்கடிப்பதுதான் ஒரே தீர்வு!
சென்னை, அக்.9 10 லட்சம் பேருக்கு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்களை மட்டும்தான் சேர்க்க வேண்டும் என்கிறது ஒன்றிய பிஜேபி அரசு. அப்படி என்றால் இந்த இலக்கை விஞ்சிய தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை மூடப் போகிறதா? இதற்கெல்லாம் ஒரே முடிவு ஒன்றிய பிஜேபி ஆட் சியை வரும் தேர்தலில் வீழ்த்துவதுதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.
இன்று (9.10.2023) சென்னை மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பு, 10 லட்சம் பேருக்கு 100 மாணவர் கள்தான் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும்; புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங் கக் கூடாது என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான
ஒன்றிய அரசின் தொடரும் அடாத செயல்கள்!
மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு - மோடி அரசு எல்லா வகை யிலும் நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்க ளுடைய கல்விக் கண்களைக் குத்துவதிலும், அவர் களுடைய மருத்துவக் கனவைச் சிதைப்பதிலும் - மாநிலங்களுடைய உரிமைகளைப் பறிப்பது போன்ற தொடர் செயல்களில், அடாத செயல்களில் அரச மைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டு வருகிறார்கள்.
தொடக்கத்திலேயே ‘நீட்' தேர்வின் கொடுமைகள்பற்றி சுட்டிக்காட்டினோம்!
அதனுடைய ஒரு புதிய அம்சமாக, இப்பொழுது குலத் தொழில் கல்வியை கிராமங்களில் அவர்கள் ''விஸ்வகர்மா யோஜனா'' என்ற பெயரால் புதுப்பித்து, 18 வயது நிரம்பியவர்கள் ஜாதித் தொழிலை செய்ய வேண்டும் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு என்று கொண்டு வந்ததின் விளைவாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில்கூட மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூடிய அளவிற்கு இருந்தும், ஒன்றிய அரசு கண் திறக்கவில்லை; பெற்றோர்கள் வேதனையோடு இருக்கிறார்கள்.
நீட் தேர்வின் கொடுமையை தமிழ்நாட்டில் ஆரம்பக் கட்டத்திலேயே நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
10 லட்சம் பேருக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படவேண்டுமாம்!
மருத்துவக் கல்லூரியைப் புதிதாகத் தொடங்காதே - 10 லட்சம் பேருக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படவேண்டும் என்று சொல்லுகின்ற உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது?
ஒரு மாநிலத்தில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இருக்க வேண்டும் எப்படி திட்டமிடப்பட வேண்டும்? என்று சொல்வது அரசமைப்புச் சட்டப்படி மாநிலங் களுக்குள்ள உரிமையாக இருக்கிறது. அந்த உரிமையை ஒன்றிய அரசு அறவே பறித்து, இனிமேல் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக்கூடாது என்று சொன்னால், என்ன அர்த்தம்?
தமிழ்நாட்டில்தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. நம்முடைய மாநிலத் திலிருந்துதான் ஆண்டிற்கு 11 ஆயிரம் பேர் மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராகிறார்கள். 54 ஆயிரம் பேர் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக் கிறார்கள். கலைஞர் அவர்களுடைய காலத்தில் எடுத்த கொள்கை முடிவுப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, ஏராளமான மருத்துவர்களைத் தயார்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள்.
மக்கள் விரோத ஆட்சி வேறு இருக்க முடியாது!
இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்களுடைய பணி என்பது குறையவில்லை. காரணம், புதிய புதிய நோய்கள் வந்துகொண்டிருக்கின்றன. கரோனா தொற்று, கரோனா வைரசின் புதிய புதிய உருமாறுதல்கள் என்று வந்துகொண்டிருக்கின்ற நேரத்தில், மருத்துவர்களின் தேவையும், மருத்துவக் கட்டமைப்பினுடைய விரைந்த செயலும் அதிகமாக வேண்டிய நேரத்தில், அந்தக் கட்டமைப்பையே சிதைக்கவேண்டும் என்று ஒன்றிய மோடி அரசு திட்டமிடுகிறது என்றால், இதைவிட ஒரு மக்கள் விரோத ஆட்சி வேறு இருக்க முடியாது.
2024 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பாடத்தை
மக்கள் கற்றுக்கொடுப்பார்கள்!
எனவே, ஒன்றிய மக்கள் விரோத ஆட்சியை எவ்வளவு விரைவில் நாம் அகற்றுகிறோமோ, அவ்வள வுக்கவ்வளவு நாட்டிற்கு நல்லது!
2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளு மன்றத் தேர்தல், ஒரு சரியான ஜனநாயகப் பாடத்தை அவர்களுக்குக் கொடுக்கும்.
இப்பொழுதே பா.ஜ.க. தென் மாநிலங்களில் இருந்து விரட்டப்பட்டு விட்டது. தற்போது காஷ்மீரில் நடந்த தேர்தல் முடிவுகளில் படுதோல்வியை பா.ஜ.க. சந்தித் திருக்கிறது.
'இந்தியா' கூட்டணிதான்
வெற்றி பெறப் போகிறது!
இதுவரையிலும் அவர்கள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. எப்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், 'இந்தியா' கூட்டணிதான் வெற்றி பெறப் போகிறது.
ஒன்றிய அரசினை எதிர்த்து, தனித்தனியே போராட்டம் நடத்துவதைவிட, ஒரே அம்சமாக ஒன்றிய ஆட்சியை மாற்றி அமைத்தால், காட்சிகள் மாறும்; மீட்சிகள் வரும் என்ற நிலையை உருவாக்குவதற்காகத்தான், மக்க ளுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்குத்தான் இந்தப் போராட்டம். இது ஒரு தொடக்கமே தவிர, முடிவு அல்ல!
எல்லாவற்றிற்கும் முதலில்
பெரியார் மண்தான் வழிகாட்டும்!
இவ்வார்ப்பாட்டம் இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இது இந்தியா முழுவதும் நடைபெறும். எல்லாவற்றிற்கும் முதலில் பெரியார் மண்தான் வழிகாட்டும்! பெரியாரின் நுண்ணாடிதான் இந்தக் கிருமிகளை அடையாளம் காட்டும்.
ஆகவேதான், இந்தப் போராட்டத்தின்படி மருத்துவக் கல்லூரி என்பது மக்கள் நல்வாழ்வுக்காக - மக்கள் உயிர் வாழ்வதற்காக! எனவே, அதுபோன்ற கல்லூரிகளைத் தொடங்கக்கூடாது என்று சொல்லுகின்ற ஒரு ஒன்றிய அரசு இருக்கிறது என்றால், அந்த அரசு மக்களைக் காப்பாற்றுவதற்கா? அல்லது மக்கள் மடிவதற்கா? என்ற கேள்வி எழுகிறது.
நல்ல அளவிற்கு, குடும்பக் கட்டுப்பாடு திட் டத்தை செயல்படுத்தினால், அரசாங்கத்தின் கொள் கையை செயல்படுத்தினால், அதற்காகப் பரிசு கொடுக்கவேண்டுமே தவிர, தண்டனையைக் கொடுக்கக் கூடாது.
அவர்களின் கணக்குப்படி தமிழ்நாட்டில்
பாதி மருத்துவக் கல்லூரிகளை மூடவேண்டும்!
புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது; 10 லட்சம் பேருக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டும் என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்?
அவர்களுடைய கணக்குப்படி பார்த்தால், தமிழ் நாட்டில் இருக்கின்ற கல்லூரிகளில், பாதி கல்லூரிகளை மூடவேண்டும். மருத்துவக் கல்லூரிகளை மூடப் போகிறார்களா?
இந்த ஆபத்தை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் ஒன்றியத்தில் இவர்களையே ஆள விட்டால், முழுக்க முழுக்க மருத்துவக் கல்லூரிகளே இருக்காது.
''ஆன்மிக மருத்துவத்தை
உண்டாக்கப் போகிறார்களாம்!''
இப்பொழுது அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், ''ஆன்மிக மருத்துவத்தை உண்டாக்கப் போகிறார்களாம்.''
அது என்ன ஆன்மிகம்?
மந்திரவாதிகளை அழைத்து வந்து, உடல்நிலை சரியில்லை என்றால், ''மந்திரம் ஓதினால் போதும் 'ஓம் ரீம்' என்று கூறினால் போதும் யாகம் நடத்தினால் போதும் சரியாகிவிடும்'' என்கிற ஆபத்து இருக்கிறது.
நிச்சயம் நாம் வெல்வோம்!
மனிதநேயத்தைக் காப்போம்!!
ஆகவே, அதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. இது போன்ற ஆபத்துகளையெல்லாம் விளக்கிச் சொல்லுவதற்காகத் தான் இந்தப் போராட்டம்!
நிச்சயம் நாம் வெல்வோம்!
மனிதநேயத்தைக் காப்போம்!
மக்களுக்காக ஆட்சி இருக்கவேண்டுமே தவிர, ஆட்சிக்காக மக்கள் ஒருபோதும் அவதிப்படக் கூடாது.
எனவேதான், எவ்வளவு சீக்கிரம் மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்ற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதனைச் செய்யவேண்டும்.
அதற்கான காரணங்களும் நாளும், நாளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment