புதுடில்லி, அக். 3- மணிப்பூரில் நாளுக்கு நாள் நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் சார்தா தேவி, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங் குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடை பெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது. இந்த வன் முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட் டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பான காட்சிப் பதிவு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி கண்டனங்கள் வழுத்தது. நாடாளு மன்றத்தில் இந்த விவகாரம் விவா திக்க எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வந்தனர். எனினும் அங்கே நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இந்த சூழலில் அங்கே மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இணையசேவை வழங்கப்பட்டது.
அப்போது சுமார் 3 மாதங்க ளுக்கு முன்னர் கடத்தி செல்லப் பட்ட 2 மாணவர்கள் காட்டில் இறந்த நிலையில் கிடக்கும் புகைப் படம் வெளியாகி பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. பிஜாம் ஹெம்ஜித் என்ற மாணவரும், அவரின் தோழியான ஹிஜாம் லிந்தோயிங்காம்பி என்பவரும் கடந்த ஜூலை 6ஆம் தேதி காணாமல் போன நிலையில், அவர்களது சடலங்கள் கிடக்கும் புகைப்படம் வெளியாகி மாணவர் கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற் படுத்தியது.
இதனால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அதனை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந் தனர். இதனால் பதற்றமான சூழல் அங்கே ஏற்பட்டு மீண்டும் அக்.1 ஆம் தேதி வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவகை யாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து போராட் டக்காரர்கள் தவுபால் மாவட்டத் திலுள்ள பாஜக அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர். ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் இதே போல் மணிப்பூரில் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே ரஞ்சன் சிங் வீடு தீக்கிரை யாக்கப்பட்ட சம்பவம் நடந்த நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மணிப்பூரில் நாளுக்கு நாள் நிலைமை மோச மாகிக் கொண்டிருப்பதாக அம் மாநில பாஜக தலைவர் சார்தா தேவி, கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளது பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக மாநில தலைவராக இருப்பவர் ஆதிகரிமையும் சார்தா தேவி (Adhikarimayum Sharda Devi) இவர் பாஜக தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "மணிப்பூரில் கடந்த ஒருவாரமாக தினமும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் பைரேன் சிங் படங்களை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர். கட்சி தலைவரான எனது வீட்டை கூட போராட்டக்காரர்கள் ஆறு முறை முற்றுகையிட்டுப் போராட் டம் நடத்தினர். இவ்வளவு மோச மான ஒரு எதிர்ப்பை நான் எப் போதும் சந்தித்ததில்லை. எனவே கட்சி தலைமை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண் டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் பாஜகவின் துணை தலைவர் சந்திராசிங் உள் ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் 8 பேர் கையெழுத்திட்டுள்ளனர். மணிப்பூர் பாஜக தலைவர், மாநி லத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளது, பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment