அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக விண்வெளி வாரம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக விண்வெளி வாரம்

16

கந்தர்வக்கோட்டை,அக்.10 புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட் டியில் உலக விண்வெளி வாரம் கடைப்பிடிப்பட்டது.   அதனை தொடர்ந்து ‘‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்'' என்ற நிகழ்வு மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவி வேதநாயகி முன்னிலை வகித்தார்.

உலக விண்வெளி வாரம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க வட் டாரத் தலைவர் ரகமதுல்லா உரை யாற்றியதாவது:

உலக விண்வெளி வாரம் என்பது 1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 இல் ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோள் - உலகின் முதன் முதலாக செலுத்தப்பட்ட செயற்கைக் கோளாகும். 1967 இல் அக்டோபர் 10 ஆம் நாளில் புற விண் வெளி அமைதி உடன்படிக்கை செய் யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாக அறியப்படுகிறது.

உலக விண்வெளி வாரம் அக்டோ பர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10 நாள் முடிய, இந்த இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வார மாக கொண்டாடப்படுகிறது.

செயற்கைக்கோள்தொழில்நுட் பத்தின் நன்மைகளை மனிதகுலத் திற்குகொண்டுவருகின்றன."செயற் கைக்கோள்கள்வாழ்க்கையைமேம் படுத்துகின்றன" என்ற பொன்மொழியு டன், பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள், கடற்படை தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, அறிவியல், சுற்றுச்சூழல் மாற் றங்கள் கண்டறிதல், விவசாயம், வணிக நுண்ணறிவு மற்றும் நமது அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் பிற முக்கிய துறைகளை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை உலக விண்வெளி வாரம் விளக்குகிறது என்றார் அவர்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணி மேகலை, சிந்தியா வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி ஆகி யோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment