வரி பகிர்வில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 12, 2023

வரி பகிர்வில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை, அக்.12 தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி 2023-2024ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த நிலையில், நேற்று (11.10.2023) சட்ட மன்றத்தில் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விவாதங்களுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த துணை மதிப்பீடுகளில், ரூ.2,893.15 கோடிக்கான கூடுதல் நிதி ஒதுக்கவும் கோரப்பட்டிருக் கிறது. இது இந்த ஆண்டிற்கான வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளின் மொத்த செலவினத்தில் சுமார் 0.70 சதவீதம் மட்டுமே என்பதை நான் இங்கே குறிப் பிட விரும்புகிறேன். இது அரசினுடைய முறையான நிதி மேலாண்மையை பிரதிபலிப்பதாகவும், அதற்கு எடுத்துக் காட்டாகவும் அமைந்திருக்கிறது.

இந்த நிதியாண்டில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் முறையே 10.6 சதவீதம் மற்றும் 13.78 சதவீதம் என ஆண்டுக்காண்டு வளர்ச்சி ஏற்பட்டி ருக்கிறது. 30-.6.-2022 முதல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறை முடிவுற்றதன் விளைவாக, தமிழ்நாடு அரசுக்கு பெருமளவிற்கான வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசினுடைய நேரடி வரி விதிப்பில் தமிழ்நாட்டினுடைய பங்களிப்பில் நாம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றோம். ஆனால், அந்தப் பங்க ளிப்பிற்கு நிகராக நாம் வரி பகிர்வினை பெற்றிருக்கிறோமா என்பதைப் பார்த்தால் இல்லை. எடுத்துக்காட்டாக, ஒன்றிய அரசிற்கு வரி வருவாயாக தமிழ்நாடு ஒரு ரூபாய் கொடுத்தால், அதற்கு ஈடாக 29 பைசா மட்டுமே நமக்கு திரும்ப கிடைக்கிறது. மாறாக, பா.ஜ.க. ஆளக்கூடிய உத்தரப் பிரதேச மாநிலம் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய்க்கு திரும்ப அவர்களுக்கு ஈடாக கிடைப்பது 2 ரூபாய் 73 பைசா. 

நிதியாண்டு 2014_-2015 முதல் 2021-2022 வரை ஒன்றிய அரசினுடைய நேரடி வரியில் தமிழ்நாட்டினுடைய பங்களிப்பு மட்டும் ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால், நமக்கு வரிப் பகிர்வாக கிடைத்தது ரூ.2.08 லட்சம் கோடி மட் டும்தான். இதே, பா.ஜ.க. ஆளக்கூடிய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நிலைமை வேறாக இருக்கிறது. உத்தரபிரதேச மாநில பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடியாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு கிடைத்த வரிப் பகிர்வு என்பது ரூ.9.04 லட்சம் கோடி. இதுதான் ஒரு கண் ணிலே வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கக் கூடிய ஒன்றிய அரசின் செயல்பாடு. 

பேரிடர் நிவாரண நிதியை எடுத்துக்கொண்டால்கூட தமிழ்நாடு கிட்டத்தட்ட 64.65 சதவீதத்தை மட் டும்தான் ஒன்றிய அரசிடமிருந்து பெற முடிகிறது. 2017இ-ல் இருந்து 2022 வரையுள்ள 5 ஆண்டுகளுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக வரக்கூடிய வருவாய் இழப்புகளுக்கு, உங்களுக்கு இழப் பீடுகள் அளிக்கப்படும் என்று சொன் னார்கள். ஆனால், 5 வருடங்கள் அந்த இழப்பீட்டைப் பெற்றதற்குப் பிறகும் உரிய வளர்ச்சியை மாநிலங்கள் பெற்றி ருக்கிறதா என்று சொன்னால் இல்லை. 2023_-2024-இல் நமக்கென்று இருக் கின்ற இந்த பாதுகாக்கப்பட்ட வரு வாயில் இருந்து, தமிழ்நாட்டிற்கு மட் டும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்டிருக்கின்ற வருவாய் இழப்பு என்பது ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கிறது. அதுமட் டுமல்ல, இந்த இழப்பீடு 2022இ-ல் முடிந்துவிட்டது. 2 ஆண்டுகளுக்கு இந்த இழப்பீட்டினை நீங்கள் நீட்டித் துத்தர வேண்டுமென்று நான் கேட்ட போதும் நீட்டித்துத் தரவில்லை. இப்போது நகர்ப்புறத்தில் இருக்கின்ற பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தைப் பார்த்தீர்களென்றால், ஒன்றிய அரசாங்கம் கொடுப்பது ஒரு வீட்டிற்கு ரூ.1லு லட்சம் தான். ஆனால், தமிழ்நாடு அரசாங்கம் குறைந்தபட்சம் ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.7 லட்சம் இன்றைக்கு கொடுக்கின்றது. ஆனால், பேர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம். இந்த நொடி வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஓர் ஒதுக்கீட்டையும் ஒன்றிய அரசு செய்யவில்லை. மாநில அரசுதான் ஒட்டுமொத்தமான அந்த செலவையும் இன்றைக்கு அதற்காக ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அதேபோல், கிராமங்களில் வீடு கட்ட ஒன்றிய அரசு கொடுக்கும் தொகை வெறும் ரூ.72 ஆயிரம். மாநில அரசு 1 லட்சத்து 20 ஆயிரம் கொடுக் கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பயனாளி களுக்கு வழங்கப்படும் மொத்தத் தொகையில் 70 சதவீதமான, ஒரு வீட்டிற்காக ரூ.1.68 லட்சத்தை தமிழ்நாடு அரசுதான் வழங்குகிறது. இதுபோலத்தான் ஜல் ஜீவன் திட்டத் தில் பாதிக்கு பாதி வழங்க வேண்டும். ஆனால், மின்சார செலவு, மற்ற செலவுகளான நடைமுறைச் செலவு, பராமரிப்புச் செலவுகளையெல்லாம் எடுத்துக் கொண்டால் 45 சதவீதத் திற்கும் குறைவாகத்தான் ஒன்றிய அரசினுடைய பங்களிப்பு, மீதி இருப் பதையெல்லாம் மாநில அரசு கொடுக் கிறது. இதுபோல, வரிசையாக நான் சொல்லமுடியும். ஆக, ஒவ்வொரு கால கட்டத்திலும் மாநில அரசினுடைய நிதி ஆதாரங்களை, ஒன்றிய அரசு தொடர்ச்சியாக வஞ்சித்துக் கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment