தூத்துக்குடி, அக்.10 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறாயிரத்து624 இடங்களில் ஜாதியஅடையாளங் கள் அழிக்கப்பட்டுள்ளன. தென்மாவட்டங்கள் ஜாதி மோதல்கள் காரணமாக மிகவும் பாதிக்கப் பட்டிருந்தன. இந்த ஜாதி மோதல்களை தடுப்பதற் காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் ஜாதிய அடையாளங் களை பொதுமக்களே முன்வந்து அழிப்பதற்கான முயற்சிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படிஒவ்வொருகிராமத்திலும் காவல்துறையினர் பொதுமக்களை சந்தித்துபேசு கின்றனர். ஜாதிய மோதல்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து பொதுமக்களேமுன் வந்துதங்கள்ஊரில் சுவர்கள், மின்கம்பங்கள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வரை யப்பட்டு இருக்கும் ஜாதிய அடையாளங்களை அழித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இந்த பணி நாள்தோறும் நடந்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 624 இடங்களில் வரையப்பட்டு இருந்த ஜாதிய அடையாளங்கள் வெள்ளை நிற பெயிண்டால் அழிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment