அந்தோ பாவம் நடராஜர் கடவுள் ஆண்டாள் கோயில் குளத்தில் மீன் வலையில் சிக்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 8, 2023

அந்தோ பாவம் நடராஜர் கடவுள் ஆண்டாள் கோயில் குளத்தில் மீன் வலையில் சிக்கினார்

விருதுநகர், அக்.8 விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூர் நகரின் மய்யப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் உள்ளது. மழை இல்லாததால் இந்தக் குளத்தில் தண்ணீர் குறைந்து வருகிறது.தற்போது குறைந்த அளவே உள்ள தண்ணீரில் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கும் பணியில் குத்தகை எடுத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

அவ்வாறு மீன்பிடித்தபோது மீன் வலையில்  அய்ம்பொன் நடராஜர் சிலை கிடைத்தது.இதுகுறித்து உடனடியாக சிறீவில்லிபுத்தூர் நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து அந்த சிலையை வருவாய்த்துறை ஆய்வாளர் மலர் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.பல்வேறு பெருமையும், சிறப்பும் நிறைந்த இந்த குளத்தில் மீன்பிடி வலையில் நடராஜர் சிலை சிக்கி உள்ளதால், வேறு சிலை எதுவும் அங்கு கிடக்கிறதா? என்பது குறித்து கண்காணிக்க வருவாய்த்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


No comments:

Post a Comment