புதுடில்லி,அக்.3- நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினரால் அவமதிக்கப்பட்ட சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தானிஷ் அலிக்கு ஆதரவாக டில்லி திராவிட மாணவர் கூட்டமைப்பு களமிறங்கியுள்ளது.
ஜாமியா மிலியா இசுலாமியா பல்கலைக் கழகம், டில்லி பல்கலைக் கழகம், அம்பேத்கர் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் திராவிட மாணவர் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குன்வர் தானிஷ் அலியை புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, வலது சாரி பார்ப்பனியத்துக்கு எதிராகக் களம் காண்பதில் தங்களின் ஆதரவை தெரிவித்து, தந்தை பெரியார் புத்தகமான “The Resolutions of Periyar EVR” புத்தகத்தை வழங்கினர்.
No comments:
Post a Comment