தடகளப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் தேஜஸ்வின் சங்கர், வித்யா ராம்ராஜ் ஆகியோர் சிறப்பாக விளையாடி பதக்கம் பெறுவதற்கான நம்பிக்கையை வலுப்படுத்தினர். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்ற தமிழ் வீராங்கனை வித்யா ராம் ராஜ் சிறப்பாக ஓடி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
வித்யா ராம்ராஜ் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். வித்யா ராம்ராஜ் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். அத் துடன் கேரளவைச்சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் தேசிய சாதனையை சமன் செய்துள்ளார். இந்த சாதனையையை கடந்த 39 ஆண்டுகளாக மற்ற இந்திய வீரர்களால் முறியடிக்க முடியாத நிலையில், தற்போது தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா படைத்தார். பி.டி.உஷாவின் இந்த சாதனையை தொட்டு சமன் செய்துள்ளார்.
தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் வசிப்பவர் வித்யா ராம்ராஜ். கரோனாவுக்கு பிறகு அவர் சென் னைக்கு மாறினார். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். நித்யா, வித்யா இருவரும் இரட்டை சகோதரிகள், இருவரும் தடகளத்தில் இந்தியாவிற்காக களமிறங்கியுள்ளனர். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வித்யா பங்கேற்கும் நிலையில், 100 மீட்டர் தடை ஓட்டத் தில் நித்யா பலம் காட்டி வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு இரட்டைச் சகோதரிகள் இணைந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
No comments:
Post a Comment